For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சோபன் பாபுவுடன் 7 ஆண்டுகள் ’வாழ்ந்ததை’ நான் ஏன் மெனக்கெட்டு மறைக்கனும்? ஜெ. ஓபன் டாக் flashback

சோபன் பாபுவுடன் 7 ஆண்டுகள் வாழ்ந்ததை தாம் ஏன் மறைக்க வேண்டும் என ஜெயலலிதா பகிரங்கமாகவே கடிதம் எழுதியிருந்தார்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    சோபன் பாபுவுடன் 7 ஆண்டுகள் ’வாழ்ந்ததை’ நான் ஏன் மெனக்கெட்டு மறைக்கனும்? ஜெ. ஓபன் டாக்- வீடியோ

    சென்னை: சோபன் பாபுவுடன் 7 ஆண்டுகள் 'வாழ்ந்ததை' ஏன் மெனக்கெட்டு மறைக்க வேண்டும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதாவே மும்பையைச் சேர்ந்த ஸ்டார் அண்ட் ஸ்டைல் ஏட்டுக்கு கடிதமாக அனுப்பியுள்ளார்.

    1980-ம் ஆண்டு சோபன் பாபு- ஜெயலலிதாவை இணைத்து மும்பையில் இருந்து வெளியான ஸ்டார் அண்ட் ஸ்டைல் ஏடு ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. இதற்கு பதிலளித்து ஜெயலலிதா ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.

    ஜெயலலிதா அனுப்பிய கடிதத்தை குமுதம் வார இதழ் 1980-ல் மொழிபெயர்த்து வெளியிட்டது. இதை பின்னாளில் திமுகவின் முரசொலி நாளேடும் பதிவு செய்திருந்தது.

    எப்போதும் ஜெ ஜெயராம்

    எப்போதும் ஜெ ஜெயராம்

    ஸ்டார் அண்ட் ஸ்டைல் ஏட்டுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்: அன்புடையீர், உங்கள் நிருபர் நன்றாக குழம்பி இருக்கிறார் என்றே நினைக்கிறேன். ஆர். ஜெயராம் என்பது காலமாகிவிட்ட என் தந்தையின் பெயர். சாதாரணமாக கடிதப் போக்குவரத்து அத்தனையிலும் நான் (மிஸ்) ஜெயலலிதா ஜெயராம் என்றே கையெழுத்திடுவது வழக்கம். நான் ஜெயராமின் மகள் என்பதை உங்கள் நிருபர் நான் படித பிரஸ்ன்டேஷன் கான்வென்ட், சர்ச் பார்க் பள்ளி ரிஜிஸ்தரை பார்த்து தெளிவடையலாம்.

    குமாரி ஜெயலலிதா

    குமாரி ஜெயலலிதா

    போதாது என்றால் தமிழ்நாடு கிரிக்கெட் அஸோஸியேஷனில் குமாரி ஜெயலலிதா ஜெயராம் என்ற பெருமையுடன் நான் மெம்பராகி உள்ளதையும் பதிவுப் புத்தகங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

    பண்பான மனிதர்

    பண்பான மனிதர்

    திரு. ஷோபன் பாபுவுடன் நான் கடந்த 7 ஆண்டுகளாக கோயிஸ் ஸ்டெடி. அவர் ஒரு நேர்மையான பண்பான மனிதர் என்பதைப் பெருமையுடன் உணர்வதால் இந்த நட்பு என் ஆயுள் உள்ளவரை நீடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

    மறைக்கவும் விரும்பவில்லை

    மறைக்கவும் விரும்பவில்லை


    அவருக்கு ஏற்கனவே மணமாகி இருப்பதால் என்னைத் தற்சமயம் மணக்க இயலாது இருக்கிறார். ஆகவே என் மிஞ்சிய வாழ்நாளை மிஸ் ஜெயலலிதா ஜெயராம் என்று இருப்பதென முடிவு செய்திருக்கிறேன். ஷோபன் பாபுவின் நட்பை நான் என்றுமே மூடி மறைத்தது கிடையாது. தென் இந்திய திரை உலகு சம்பந்தப்பட்டவர்கள் இதை நன்கு அறிவர். நடிகை என்ற இமேஜையோ மீண்டும் திரை உலகில் பிரவேசம் செய்வதையோ குறித்து அலட்டிக் கொள்ளாத காரணத்தால் மிகுந்த பிரயத்தனப்பட்டு எதையும் மக்களிடம் இருந்து மறைக்கும் நிலைமை எனக்கு இல்லை.

    அன்புடன்
    ஜெயலலிதா ஜெயராம்
    குமுதம்-1980 .

    இவ்வாறு ஜெயலலிதா எழுதியிருந்தார்..

    English summary
    Here is the letter from Jayalalithaa to Mumbai Magazine on her relationship with Sobhan babu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X