For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதா சிகிச்சை செலவு ரூ.5.5 கோடி: அப்பல்லோ அறிவிப்பு

ஜெயலலிதாவுக்கான சிகிச்சைக்கு ரூ.5 முதல் ரூ.5.4 கோடி வரை செலவானது. இந்த மருத்துவ பில் அவரது குடும்பத்தாருக்கு அனுப்பப்பட்டது என்று அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் பாலாஜி தெரிவித்தார்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கும் நிலையில், இன்று அப்பல்லோ மருத்துவமனை சார்பில் டாக்டர்கள் பிரஸ் மீட் செய்தனர். ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியல், டாக்டர் பாலாஜி, டாக்டர் பாபு உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் பேசினர்.

அப்போது, ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்க எவ்வளவு செலவானது என்ற கேள்வி நிருபர்களால் எழுப்பப்பட்டது. அப்போது டாக்டர் பாலாஜி கூறுகையில், "ஜெயலலிதாவுக்கான சிகிச்சைக்கு ரூ.5 முதல் ரூ.5.4 கோடி வரை செலவானது. இந்த மருத்துவ பில் அவரது குடும்பத்தாருக்கு அனுப்பப்பட்டது" என்றார். யார் அந்த குடும்பம் என்று மீண்டும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளிக்க பாலாஜி திணறினார்.

Jayalalithaa's treatment cost is Rs 5 to Rs 5.4 crore: Apollo Doctor

அப்பல்லோ மருத்துவமனை, சி.இ.ஓதான், இதற்கு பதிலளிக்க சரியான நபர் என்றும், தான் பிரஸ் மீட்டுக்காக இந்த தகவலை அரைகுறையாக கேட்டு்க்கொண்டு வந்ததாகவும் பாலாஜி தெரிவித்தார். விரைவில் மற்றொரு நாள் நிருபர்களை சந்திப்பதாகவும் அப்போது இதுகுறித்து கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

English summary
Jayalalithaa's treatment cost was around Rs 5 to Rs 5.4 crore. Bill handed over to family, says Apollo Dr Balaji.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X