For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மூங்கில் கூடையில் சந்தன நாற்காலியில் அமர்ந்தபடி ஜெயேந்திரர் உடல் அடக்கம்

மூங்கில் கூடையில் சந்தன நாற்காலியில் அமர்ந்தபடியே ஜெயேந்திரரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    சந்தன நாற்காலியில் அமரவைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டார் ஜெயேந்திரர்- வீடியோ

    காஞ்சிபுரம்: மூங்கில் கூடையில் சந்தன நாற்காலியில் அமர்ந்தபடி ஜெயேந்திரரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    காஞ்சி சங்கர மடத்தின் மூத்த மடாதிபதியான ஜெயேந்திரருக்கு நேற்று காலை மூச்சுதிணறல் ஏற்பட்டது. அவர் உடனடியாக காஞ்சி சங்கர மடத்துக்கு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடல் அடக்கம் செய்வதற்கு முன்னர் சில நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

    சாலிகிராம் கல்

    சாலிகிராம் கல்

    ஜெயேந்திரர் முக்தி அடைவதற்காக இமயமலையில் உள்ள முக்திநாத்திலிருந்து கொண்டு வரப்பட்ட சாலகிராம் கல்லை அவரது தலையில் வைத்து அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது வேத மந்திரங்கள் முழங்கப்பட்டது.

    குழி தோண்டப்பட்டது

    குழி தோண்டப்பட்டது

    பிருந்தாவனத்தில் மகா பெரியவரின் நினைவிடத்துக்கு அருகில் ஜெயேந்திரருக்காக 7-க்கு 7 அடியில் பள்ளம் தோண்டப்பட்டது. அங்கு நெய், மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

    சந்தன நாற்காலி

    சந்தன நாற்காலி

    ஜெயேந்திரர் உயிரோடு இருந்த வரை சந்தன நாற்காலியில் அமர்ந்திருந்தார். அதுபோல் அவர் இறந்த பிறகும் அதே நாற்காலியில் அமர்வதற்கென புதிதாக சந்தன நாற்காலி செய்யப்பட்டது. அதில் ஜெயேந்திரரை அமர வைத்து அதன் மேல் பெரிய மூங்கில் கூடை வைத்து மூடப்பட்டது.

    நல்லடக்கம்

    நல்லடக்கம்

    ஜெயேந்திரரின் உடல் மீது வசம்பு, சந்தனக் கட்டைகள், உப்புகற்கள் ஆகியன நிரப்பப்பட்டன. இதைத் தொடர்ந்து மணல் மற்றும் சிமெண்ட் கலவை கொண்டு பூசப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. அதன் மேல் மகா பெரியவருக்கு இருப்பது போல் நினைவிடம் கட்டப்படும்.

    English summary
    Jayendrar's body buried in the sitting position using Sandal Chair. Here are the procedures how his body buried.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X