For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"தங்கமே" இப்படிப் பண்ணிட்டியே தங்கமே... நாகர்கோவிலைக் கலக்கிய பெண்ணின் பலே திருட்டு!

பணத்திற்காக கணவனிடம் நடித்து ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    நாகர்கோவிலைக் கலக்கிய பெண்ணின் பலே திருட்டு!- வீடியோ

    கன்னியாகுமரி: பணத்திற்காக யாரை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு ஒரு சம்பவம் நாகர்கோவிலில் நடந்துள்ளது. அதை கொஞ்சம் படியுங்களேன்.

    நாகர்கோவில் வடிவீஸ்வரம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ரமேஷ், 42, வக்கீல் குமாஸ்தா. இவரது மனைவி தங்கம் 39, தங்கம் அப்பகுதியில் சுய உதவி குழு வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் 12 ஆம் தேதி இவரது வீட்டில் 33 பவுன் தங்க நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போனதாக தெரிகிறது. இது குறித்து ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கோட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்,

    மனைவியை கடத்துவேன்

    மனைவியை கடத்துவேன்

    இதனிடையே கடந்த மாதம் 27 ஆம் தேதி ரமேஷின் செல்போனின் தொடர்பு கொண்ட ஒருவர் கொள்ளை குறித்த புகாரை திரும்ப பெறவில்லை என்றால் உன் மனைவியை கடத்துவேன் என கூறி விட்டு தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ் மீண்டும் போலீசாரிடம் கடத்தல் மிரட்டல் குறித்து புகார் அளித்தார். இந்நிலையில் போனில் வந்த மிரட்டலின்படியே கடந்த 29-ம் தேதி ரமேஷின் மனைவி தங்கம் மாயமானார், ரமேஷின் செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், தங்கத்தை கடத்தி இருப்பதாகவும் கொள்ளை சம்பவ புகாரை திரும்பப்பெறவில்லை என்றாலோ, மீண்டும் போலீசாரிடம் சென்றாலோ உனது குழந்தைகளையும் கடத்துவேன் என கூறி விட்டு மீண்டும் தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் அந்த பகுதியிலேயே பெரும் பரபரப்பு ஏற்பட்டது, மேலும் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    மொட்டை தலை தங்கம்

    மொட்டை தலை தங்கம்

    இந்நிலையில், நேற்று முன்தினம், ரமேஷின் செல்போனில் மீண்டும் தொடர்பு கொண்ட அந்த மர்ம மனிதர், "உன் மனைவியை ஆரல்வாய்மொழி பேருந்து நிறுத்தத்தில் கொண்டு விட்டுவிட்டோம்" என்று கூறி தொடர்பை துண்டித்துவிட்டார். இதனை தொடர்ந்து போலீசாரின் உதவியுடன் ரமேஷ் மற்றும் உறவினர்கள் ஆரல்வாய்மொழி பேருந்து நிலையம் சென்றனர். அப்போது ரமேஷ் மனைவி தங்கம், முடியில்லாமல் மொட்டை தலையுடனும்,போதையுடனும் காணப்பட்டார், அவரை மீட்ட போலீசார் சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தன்னை கடத்தியவர்கள் ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து போதை ஊசி போட்டு அடித்து துன்புறுத்தியதாகவும், நான்கு நாட்களுக்கு பின்னர் காரில் வைத்து மீண்டும் போதை ஊசி போட்டு பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டு விட்டதாகவும் கூறினார்.

    கிடுக்கிப்பிடி விசாரணை

    கிடுக்கிப்பிடி விசாரணை

    இதனை தொடர்ந்து போலீசார் ஆரல்வாய்மொழி பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர், அங்குள்ள கடைகளில் விசாரணை மேற்கொண்டபோது கடந்த இரண்டு நாட்களாக ரமேஷின் மனைவி தங்கம் தனியாக இப்பகுதியில் நடமாடியதை கண்டதாகவும், பேருந்து நிறுத்தத்திற்கு தனியாக வந்து அமர்ந்து இருந்ததாகவும் தெரிவித்தனர், இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தங்கத்திடம் கிடுக்குப்பிடி விசாரணையை மேற்கொண்டனர், அப்போதுதான் அவர் கூறியதாவது:

    தங்கத்தின் வாக்குமூலம்

    தங்கத்தின் வாக்குமூலம்

    "பணத்திற்கு ஆசைப்பட்டு சுயஉதவி குழுக்களிடம் இருந்து பெறப்படும் பணத்தை கணவருக்கு தெரியாமல் வட்டிக்கு விட்டேன், வட்டிக்கு வாங்கியவர்கள் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதால் கடன் சுமை ஏற்பட்டுவிட்டது, இந்த பிரச்சனையை தீர்க்க வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடினேன். இது தொடர்பாக எனது கணவர் போலீசாரிடம் புகார் அளித்ததால் அதில் இருந்து தப்பிக்க திருச்செந்தூர் சென்று மொட்டை அடித்துவிட்டு கடத்தல் நாடகம் ஆடினேன். கணவர் போலீசாரிடம் சொல்லாமல் இருக்க கைபேசியில் வாய்ஸ் சேஞ்ச் அப்ளிகேஷன் மூலம் ஆண் குரலில் நான்தான் பேசினேன். ஆனால் அதன் பிறகும் கணவர் போலீசாரிடம் சென்றதால் கடத்தியவர்கள் தன்னை விட்டு விட்டு சென்றதாக கூறி நாடகம் ஆடினேன்". இவ்வாறு தங்கம் வாக்குமூலம் அளித்தார். தங்கம் சொன்ன விஷயங்களை கேட்க கேட்க அவரது கணவர் உட்பட போலீசார் அனைவருமே ஆடிப்போய் விட்டனர். இதனை தொடர்ந்து தங்கம் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    எம்ஜிஆர் பாடியது சரியே

    எம்ஜிஆர் பாடியது சரியே

    ஒருபுறம் பெண்களுக்கான உரிமைகள், அங்கீகாரம், பெண்ணீயத்துக்கான போராட்டங்கள் நடைபெறுகின்றன என்றால், மற்றொருபுறம் "இதுபோல கூட பெண்கள் இருப்பார்களா? என்று நினைக்கும் அளவுக்கு கீழ்த்தரமாக, பயங்கரமான செயல்களில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சி அளிக்கிறது. பணத்திற்காக எத்தனை பொய், எவ்வளவு நடிப்பு, எவ்வளவு பித்தலாட்டம்... இதில் பணம் கொடுத்து ஏமாந்த ஊர்மக்கள் பாவம் என்றால் அதைவிட பாவம், கணவர் ரமேஷ். நகைகள் கொள்ளை, மனைவி கடத்தல், குழந்தைகளையும் கடத்த போவதாக தகவல்... என ஒவ்வொரு பிரச்சனைகளின்போது எப்படியெல்லாம் துடித்திருப்பாரோ தெரியாது.

    கடைசியில் மனைவியே தன்னை நடித்து ஏமாற்றியதை எப்படி அவர் ஜீரணித்து இருப்பார் என யூகிக்ககூட முடியவில்லை. தன்னை சுற்றிலும் சுயநலம், சுகபோகத்தில் நாட்டம், உழைக்காமல் பணம் திரட்ட வேண்டும் என்ற பெண்ணின் பேராசையே இதற்கு காரணம். பெண் என்னும் ஒரே ஒரு ஆயுதத்தை வைத்துக் கொண்டு கிரிமினல் நடவடிக்கைளில் ஈடுபடும் இதுபோன்றவர்களை ஒருபோதும் மன்னிக்க கூடாது. கம்பி எண்ணும் தங்கத்தை நினைக்கும்போது மக்கள் திலகம் எம்ஜிஆர் பாடிய பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

    "அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழியிருக்கும்
    எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்
    சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும் - தக்க
    சமயத்தில் நடந்ததை எடுத்துரைக்கும்
    ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே"!!

    English summary
    In Nagercoil, police have arrested the wife and cheated her husband for money and jewelry. The police investigated the lady who cheated his husband in a male voice in the cell phone.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X