For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"சம்பா பருவத்திற்கு செவ்வாயிலிருந்து 15 நாட்களில் தண்ணீர் திறக்கப்படும்"... ஆரம்பிச்சுட்டாங்கப்பா!

Google Oneindia Tamil News

சென்னை: நாட்டு நடப்புகளை வைத்சு நச்சென்று நாலு மீம்ஸ் போட்டோமா... நறுக்குன்னு நாலு கமெண்ட் போட்டோமா என்று மக்கள் பிசியாகத்தான் உள்ளனர். இப்போதும் கூட செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை வைத்து மீம்களும், காமெடிகளும் கொடி கட்டிப் பறக்கின்றன.

நம்ம ஊரில் மட்டுமல்லாமல் "வெள்ளைக்காரர்களும்" கூட செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் கண்டுபிடிக்கப்பட்ட தகவலை காமெடியாக்கி ஜோக் பண்ணி வருகின்றனர் சமூக வலைதளங்களில்.

சில ஜோக்குகள் உண்மையிலேயே சிரிப்பை வரவழைக்கின்றன.. சில சிந்திக்க வைக்கின்றன.. மற்றும் பல "மொக்கை"யாக உள்ளன.

காவிரி டெல்டாவுக்கு

பெரியவா மணி என்பவர் போட்டுள்ள டிவிட்டில் "செவ்வாயில் தண்ணீர் உள்ளது -NASA #காவேரி டெல்டா சம்பா பருவத்திற்கு செவ்வாயிலிருந்து 15 நாட்களில் தண்ணீர் திறக்கப்படும்- நாசா #goodolddays" என்று போட்டுள்ளார்.

ஓமைகாட்!

ரீவைட்டலைஸ் என்பவர் போட்டுள்ள டிவிட் இது. மார்ஸ் என்ற சாக்லேட் பாக்கெட்டின் மீது ஒரு கிளாஸ் தண்ணீரை வைத்து "OMG Water on Mars confirmed" என்று கலாய்த்துள்ளார்.

முதல்ல பூமியில கண்டுபிடிங்கடா

இது ஆழ்வார்க்கடியான் என்பவரின் டிவிட் - "முதல்ல பூமில எங்க தண்ணியிருக்குன்னு கண்டுபிடிங்கடா. செவ்வாய்க்கு அப்புறம் போகலாம். போர்வெல் போட்டு தண்ணிய காணாம பண்ணிட்டானுங்க #WaterOnMars"

அத விடுங்க. இது என்னாச்சு...?

இது ஹன்சிகாவின் (இவங்க வேற ஹன்சிகா) கவலை - "#WaterOnMars but what about the depleting level of ground water on Earth?"

பெங்களூர்க்காரங்களைக் கூட்டிட்டு போங்க

இது மரண கலாய் பாஸ்.. லையிங் லாமாவின் கமெண்ட்டைப் பாருங்க... "BREAKING: NASA requests volunteers from Bangalore as they're most familiar with the conditions on Mars. #WaterOnMars"

English summary
Water on Mars now become a joke in Social media. Jokes are flowing in full swing on the social media sites.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X