For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலாசலா கலாசலா சசிகலா.. சின்னம்மா..சின்னம்மா... அன்று மெரினாவை அதிரவைத்த ஜூலியின் முழக்கம்

மெரினாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு புரட்சியில் ஜூலியின் முழக்கங்கள் அதிர வைத்தன.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    மெரினாவை அதிரவைத்த ஜூலியின் முழக்கம்

    சென்னை: உலகை அதிர வைத்த மெரினா புரட்சியில் பங்கேற்ற நர்ஸ் ஜூலியின் முழக்கங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இப்போது ஜூலி பிரபலங்களில் ஒருவராக உருவெடுத்தும் உள்ளார்.

    மெரினாவில் கடந்த ஆண்டு ஜனவரி 18-ந் தேதி ஜல்லிக்கட்டுக்கான மாணவர்கள், இளைஞர்களின் கிளர்ச்சி தொடங்கியது. இது ஒவ்வொரு நாளாக புரட்சியாக உருவெடுத்தது.

    மெரினா கடற்கரையெங்கும் மக்கள் வெள்ளம்.. எல்லா சாலைகளும் ரோமை நோக்கி என்பதைப் போல சென்னை பெருநகர மக்கள் சாரை சாரையாக மெரினாவில் குவிந்தனர்.

    அறவழி போர்

    அறவழி போர்

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஜல்லிக்கட்டு உரிமையை மீட்பதற்கான மெரினா புரட்சியில் வந்து இணைந்து கொண்டனர். உலகமே அதிரும் வகையிலான அறவழி புரட்சி மெரினாவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

    கலாசலா கலாசலா

    கலாசலா கலாசலா

    அப்போது எழுந்த வித்தியாசமான முழக்கம்தான்.. கலாசலா கலாசலா சசிகலா... காணோம் காணோம் ஓபிஎஸ்ஸை காணோம்.. வர சொல் வர சொல் ஓபிஎஸ்ஸை வர சொல்.. சின்னம்மா சின்னம்மா.. எங்கம்மா எங்கம்மா? என்ற முழக்கங்கள்.

    ஜூலி குறித்து வதந்தி

    ஜூலி குறித்து வதந்தி

    நர்ஸாக பணிபுரிந்த ஜூலி என்ற இளம்பெண் எழுப்பிய இந்த முழக்கங்கள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. சசிகலாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால் ஜூலி படுகொலை செய்யப்பட்டதாகவும் வதந்திகள் பரவின. ஆனால் ஜூலியே இந்த வதந்திகளை பகிரங்கமாக மறுத்திருந்தார்.

    நடிகையான ஜூலி

    இந்த ஜூலிதான் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று சர்ச்சைகளின் நாயகியானார். இப்போது பிரபலங்களில் ஒருவராக நடிகையாக அவதாரமெடுத்திருக்கிறார்.

    English summary
    Today is the firs Anniversary of Jallikattu Revolution which was held at Chennai Marina Beach on 2017.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X