For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணை.. நீதிபதி விமலா மகன் ஒரு பிரபலம்.. யார் தெரியுமா?

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    தகுதிநீக்க வழக்கில் 3-ஆவது நீதிபதி விமலா நீக்கம்- வீடியோ

    சென்னை: ஜோதிகா ரீ என்ட்ரி நடிப்பில் வெளியான '36 வயதினிலே' படத்தில் 'வாடி ராசாத்தி...' என்ற பாடல் மூலம் புகழ் பெற்றவர் பாடலாசிரியர் விவேக்.

    இதன்பிறகு இறுதிச்சுற்று, இறைவி, ஒரு நாள் கூத்து (அடியே அழகே.. பாடல்) என மெல்ல மெல்ல ஆனால் ஸ்டெடியாக முன்னேறி வந்த விவேக், பரவலாக ரசிகர்களிடம் சென்று சேர்ந்தது மெர்சல் திரைப்படத்தின் பாடல்களால்.

    ஏ.ஆர்.ரஹ்மான், விஜய் ஆகிய இரு ஜாம்பவான்களின் தாக்கம் படத்தில் இருந்த நிலையில், பட்டிதொட்டியெங்கும், பாடல் சென்று சேர்ந்தது. இவரது திறமைக்கு அங்கீகாரம் கிடைத்தது.

    விவேக்கின் தாயார் நீதிபதி

    விவேக்கின் தாயார் நீதிபதி

    இதில் மகுடம் வைத்த பாடல் ‘ஆளப்போறான் தமிழன்...' தமிழர்களின் தேசிய கீதம்போல மாறிவிட்ட இந்த பாடலை எழுதிய பெருமை விவேக்கையே சேரும். இப்போது விவேக் பற்றிய முன்னுரை ஏன் என்கிறீர்களா? சம்மந்தம் இருக்கிறது. தினகரன் ஆதரவு 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், ஹைகோர்ட் 3வது நீதிபதியாக நியமித்த விமலா, கவிஞர் விவேக்கின் தாயார்தான்.

    குடும்பமே வழக்கறிஞர்கள்தான்

    குடும்பமே வழக்கறிஞர்கள்தான்

    விவேக்கும் தொழில்முறையாக வழக்கறிஞர்தான். அவரது மனைவி ஷாரதாவும் வழக்கறிஞர். இப்படியாக ஒரு சட்ட வல்லுநர்களின் பின்னணி கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர் விவேக்.

    உச்சநீதிமன்றத்தில் வழக்கு

    உச்சநீதிமன்றத்தில் வழக்கு

    இந்த நிலையில்தான், நீதிபதி விமலா தங்கள் வழக்கை விசாரிக்க கூடாது என தினகரன் ஆதரவு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றனர். அரசு வழக்கறிஞராக விமலாவின் உறவினர் இருப்பதுதான் இதற்கான காரணமாக கூறப்பட்டது.

    கவனம் ஈர்த்த விவேக்

    கவனம் ஈர்த்த விவேக்

    இதையடுத்து, நீதிபதி சத்தியநாராயணன் அவ்வழக்கை விசாரிப்பார் என்று உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், நீதிபதி விமலாவை வழக்கில் இருந்து விடுவித்துள்ளது. இதனால்தான் விமலா மற்றும் அவரது மகன் விவேக் ஆகியோர் இன்றைய செய்தியில் அதிகம் கவனம் ஈர்த்துள்ளனர்.

    English summary
    Justice S. Vimala who is mother of lyricist vivek to be asked stay away from disqualified MLAs case, by Supreme court.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X