For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லோக்சபா தேர்தல்: பாஜக அணிக்கு 41%, மோடிக்கு 48%. ஜெ.வுக்கு 12% ஆதரவு

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: லோக்சபா தேர்தல் தொடர்பாக ஜூனியர் விகடன் தமிழகத்தில் நடத்திய கருத்து கணிப்பில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணிக்கு 40.88% பேர் ஆதரவு தருவதாகவும் யார் பிரதமர் என்ற கேள்விக்கு மோடிக்கு 48.49% பேரும் ஜெயலலிதாவுக்கு 12.47% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் கருத்து கணிப்புகள் பலவும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த வரிசையில் ஜூனியர் விகடன் வாரம் இருமுறையும் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. 3,.402 பெண்கள் உட்பட 9174 பேரிடம் ஜூவி டீம் கருத்து கணிப்பு நடத்தியது.

ஜூனியர் விகடனின் தேர்தல் 2014 கருத்து கணிப்பு முடிவுகள் விவரம்:

காங்- திமுக உறவு

காங்- திமுக உறவு

காங்கிரஸுடன் இனி கூட்டணி இல்லை என கருணாநிதி அறிவித்திருப்பது சரி என 31.39%, சரியில்லை என 15.97 பேர் கூறியுள்ளனர். இது சந்தர்ப்பவாதம் என 52.64% பேர் தெரிவித்துள்ளனர்.

திமுக தனித்துவிடப்பட்டிருக்கிறதா?

திமுக தனித்துவிடப்பட்டிருக்கிறதா?

தேர்தலில் திமுக தனித்துவிடப்பட்டிருக்கிறதா என்ற கேள்விக்கு ஆம் என 35.56%, இல்லை என 31.52% பேர் கூறியுள்ளனர். 32.92% பேர் கருத்து சொல்ல விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர்.

திமுக- தேமுதிக கூட்டணி?

திமுக- தேமுதிக கூட்டணி?

திமுக- தேமுதிக கூட்டணி அமைந்தால் என்ற கேள்விக்கு பலமான கூட்டணி என 21.73%, சந்தர்ப்பவாத கூட்டணி என 41.19%, மக்கள் ஏற்கமாட்டார்கள் என 37.08% பேர் கூறியுள்ளனர்.

பாஜக அணியில்...

பாஜக அணியில்...

தேமுதிக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகள் பிஜேபி அணியில் சேர்ந்தால்? என்ற கேள்விக்கு முரண்பாடாக இருக்கும் - 41.23%. பலமான அணியாக இருக்கும்- 28.19%, காங்கிரஸ் எதிர்ப்பு அணி 30.58% என கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

விஜயகாந்த் எந்த அணியில்?

விஜயகாந்த் எந்த அணியில்?

விஜயகாந்த் எந்தக் கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்ற கேள்விக்கு திமுக கூட்டணியில் 20.91%. அதிமுக கூட்டணியில்-10.50%, பிஜேபி கூட்டணியில் 26.59%, காங்கிரஸ் கூட்டணியில் 8.86% பேரும் இடம்பெற வேண்டும் என்று கூறியுள்ளனர். 33.14% பேர் விஜயகாந்த் தனித்துப் போட்டியிட வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

காங். பிரதமர் வேட்பாளர்

காங். பிரதமர் வேட்பாளர்

காங்கிரஸ் யாரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற கேள்விக்கு மன்மோகன்சிங்-19.64%, ராகுல் காந்தி- 50.93%, சோனியா காந்தி-13.37%, பிரியங்கா காந்தி 16.06% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

யார் பிரதமர்? மோடிக்கு 48.49% ஆதரவு

யார் பிரதமர்? மோடிக்கு 48.49% ஆதரவு

அடுத்து யார் பிரதமராக வேண்டும் என்ற கேள்விக்கு மன்மோகன்சிங்குக்கு 7.22% பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். ராகுலுக்கு 15.63%, மோடிக்கு 48.49% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஜெ. பிரதமராக 12.47% மட்டும் ஆதரவு

ஜெ. பிரதமராக 12.47% மட்டும் ஆதரவு

ஆனால் ஜெயலலிதா பிரதமராக 12.47% பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்

சம நிலையில் திமுக-அதிமுக:

சம நிலையில் திமுக-அதிமுக:

நாடாளுமன்ற தேர்தலில் எந்த கூட்டணிக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு காங்கிரஸ் கூட்டணி-10.21%. பிஜேபி கூட்டணி- 40.88%, திமுக கூட்டணி- 21.77%, அதிமுக கூட்டணி- 22.70%, பாமக கூட்டணி- 4.44% பேர் வாக்களிப்போம் எனக் கூறியுள்ளனர்.

அதிமுகவும் திமுகவும் கிட்டத்தட்ட சம நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.

English summary
Junio Vikatan magazine conducted a survey on upcoming lok sabha elections. It shows BJP led NDA will get nearly 41% vote from Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X