For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேணு சீனிவாசனை சிலைக் கடத்தலில் தொடர்புப்படுத்துவதை ஏற்க முடியாது.. வைகோ, மாஃபா பாண்டியராஜன்

சிலைக் கடத்தல் வழக்கில் முன் ஜாமீன் பெற்று இருக்கும் டிவிஎஸ் குழும நிறுவனத்தின் தலைவரான வேணு சீனிவாசன் மிகவும் நல்லவர் என்று முக்கிய அரசியல் தலைவர்கள் ஆதரவு கரம் நீட்டியுள்ளனர்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: சிலைக் கடத்தல் வழக்கில் முன் ஜாமீன் பெற்று இருக்கும் டிவிஎஸ் குழும நிறுவனத்தின் தலைவரான வேணு சீனிவாசன் மிகவும் நல்லவர் என்று முக்கிய அரசியல் தலைவர்கள் ஆதரவு கரம் நீட்டியுள்ளனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

சில கடத்தல் பிரச்சனை தற்போது தமிழகத்தில் உச்சத்தை அடைந்துள்ளது. சிலை கடத்தல் தொடர்பாக பல வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கபட்டு வருகிறது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உற்சவர் சிலை மாற்றப்பட்டுள்ளதாக தொடுக்கப்பட்ட வழக்கும் விசாரணையில் உள்ளது. ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் ஹைகோர்ட்டில் தொடர்ந்த இந்த வழக்கில் பல முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

முன்ஜாமீன் தக்கல்ஸ் செய்தார்

முன்ஜாமீன் தக்கல்ஸ் செய்தார்

இந்த பிரச்சனைக்கு மத்தியில் நேற்று இரவோடு இரவாக டிவிஎஸ் குழும நிறுவனத்தலைவரான வேணு சீனிவாசன் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். வேணு சீனிவாசன் ஸ்ரீரங்கம் கோயில் அறங்காவலர் குழுத் தலைவராக இருந்தவர். இதனால் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து நேற்று இரவு அவர் சென்னை ஹைகோர்ட்டில் முன் ஜாமீன் மனுதாக்கல் செய்தார்.

கைது கூடாது

கைது கூடாது

இந்த நிலையில் வேணு சீனிவாசனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. வேணு சீனிவாசனை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் 6 வார கால இடைக்காலத் தடை விதித்துள்ளது. தேவையான விசாரணைகளை மட்டும் நேரில் சந்தித்து நடத்தலாம், கைது செய்ய கூடாது என்று கூறியுள்ளனர்.

மாஃபா பாண்டியராஜன் ஆதரவு

மாஃபா பாண்டியராஜன் ஆதரவு

வேணு சீனாவானுக்கு ஆதரவாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் குரல் கொடுத்துள்ளார். அதில் ''சிலை கடத்தலில் வேணு சீனிவாசனுக்கு தொடர்பு என்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. அவர் மிகவும் நல்லவர். விசாரணையில் எதோ தவறு இருக்கிறது. என்னால் இதை நம்பவே முடியவில்லை'' என்று அவர் கூறியுள்ளார்.

வைகோ ஆதரவு

வைகோ ஆதரவு

இதுகுறித்து மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறுகையில், இந்தியாவிலேயே புகழ்பெற்ற தொழில் நிறுவன டி.வி.எஸ். குழுமம். டி.வி.எஸ். குழுமத்தின் வேணு சீனிவாசன் மிக மிக நல்லவர். கோவில்களுக்கு நல்ல நிறைய காரியங்களை அவர் செய்துள்ளார். அவர் மிகவும் நேர்மையானவர். அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டதை கேட்டு அதிர்ந்தேன். இந்த செய்தி எனக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது, அவர் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

English summary
K. Pandiarajan and Vaiko extends their support to TVS group chairman Venu Srinivasan in idol theft case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X