For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனா, அமெரிக்காவில் வாட்ஸ் அப் முறை கிடையாது.. இந்தியாவிலும் ஒழிக்க வேண்டும்.. கே எஸ் அழகிரி

Google Oneindia Tamil News

சென்னை: சமூக வலைதளங்கள் பொறுப்பற்ற முறையில் செயல்படுகின்றன வாட்ஸ் அப் முறையை ஒழிக்க வேண்டும் கே.எஸ்.அழகிரி பேட்டி அளித்துள்ளார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:- தந்தை பெரியார் பொது வாழ்க்கையை சீர்திருத்தம், புரட்சி, மூட நம்பிக்கை ஒழிப்பு, மத, கடவுள் எதிர்ப்பு போன்ற விசயங்கள் முலம் தொடங்கினார்.

ராஜாஜி மத நம்பிக்கை உடையவராக இருந்தார். ஆனால் பெரியாரும் ராஜாஜியும் சிறந்த நண்பர்களாக இருந்தனர். ராஜாஜி மரணமடைந்த போது இடுகாடு வரை சென்று அழுதார். கொள்கை என்பது வேறு. பழக்கவழக்கங்கள், நட்பு என்பது வேறு.

சசிகலா சிறையில் இருப்பது வேதனை தருகிறது.. சீக்கிரம் ரிலீஸ் ஆக வேண்டும்.. ராஜேந்திர பாலாஜி உருக்கம்! சசிகலா சிறையில் இருப்பது வேதனை தருகிறது.. சீக்கிரம் ரிலீஸ் ஆக வேண்டும்.. ராஜேந்திர பாலாஜி உருக்கம்!

காட்டுமிராண்டிகள்

காட்டுமிராண்டிகள்

பெரியார் தனக்கு சரியென தோன்றியதை சொன்னார். அதை ஏற்று கொள்ளுகிறோமா இல்லையா என்பது வேறு விசயம். விருப்பம் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளலாம். விருப்பம் இல்லாதவர்கள் நிராகரித்து விடலாம். ஆனால் அவரது சிலையை காட்டுமிராண்டிகள் உடைத்து இருப்பது கண்டிக்கத்தக்கது.

பாஜக

பாஜக

இது போன்ற செயல்கள் நடக்க கூடாது. தமிழர்களின் பெருமையை சீர்குலைக்கும். பா.ஜ.க. ஆட்சிக்கு வரும்போது பெரியாரின் அறக்கட்டளை தேச உடைமையாக்கப்படும் என்று சொன்னால் அது சர்வாதிகாரம். ஒரு நாள் பா.ஜ.க. அறக்கட்டளைக்கும் அதுப்போல் நிலை வராதா.

ஆதாரம்

ஆதாரம்

டெல்லியில் வேறு கட்சி ஆட்சிக்கு வரும்போது பா.ஜ.க. அறக்கட்டளை தேசியமையம் ஆக்க முடியாதா. கொள்கை ரீதியாக பெரியாரை விமர்சிக்கலாம். அதைவிட்டு பேசுவது சரியானதல்ல. சமூக வலைதளத்தில் யாரை வேண்டுமானாலும் சிறுமைப்படுத்தலாம். அதற்கு எந்த ஆதாரமும் தேவையில்லை.

மிருக நாகரீகம்

மிருக நாகரீகம்

இது மனித நாகரீகத்தை மிருக நாகரீகத்திற்கு அழைத்து செல்வது போல் இருக்கிறது. சமூக வலைதளங்கள் தொடர்பாக நீதிமன்றத்தின் கருத்தை ஏற்று கொள்கிறேன். சீனா, அமெரிக்காவில் வாட்ஸ் ஆப்பே கிடையாது. வாட்ஸ் ஆப் முறையை எடுத்துவிடலாம்.

99 சதவீதம்

99 சதவீதம்

இதனால் மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை. குழந்தைகள் கெட்டு போகின்றனர். எல்லா குழந்தைகளும் செல்போன்களை வைத்து பார்த்து கொண்டே இருக்கிறார்கள். இதனால் படிப்பு, மனசு, பொன்னான நேரம் கெடுகிறது. வாட்ஸ் ஆப்பில் வரும் 99 சதவீத செய்திகள் தவறானது.

கூட்டணி கட்சிகள்

கூட்டணி கட்சிகள்

சமூக வலைதளங்கள் பொறுப்பு அற்ற முறையில் செயல்படுகின்றன. இதற்கு எதிராக கடிவாளம் போட நீதிமன்றம் எடுக்கும் முடிவை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடக்கும் கையெழுத்து இயக்கத்தில் கூட்டணி கட்சிகள் அனைத்து பங்கேற்கும். இவ்வாறு அவர் கூறினார்.

English summary
Tamilnadu Congress Chief K.S.Alagiri opposes Whatsapp application as it has operated without any responsibility.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X