For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈழத்தமிழர்களுக்காக திமுக இழந்தது அதிகம்.. கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

Google Oneindia Tamil News

திருச்சி: ஈழத்தமிழர்களுக்காக மற்றவர்களை விட திமுக இழந்ததே அதிகம் என்று இன்றைய திமுக மாநாட்டில் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

ஈழத்தமிழர்கள் பிரச்சனையில் தீர்வு கிடைக்குமா? என்ற தலைப்பின் கீழ் ராதாகிருஷ்ணன் பேசினார்.

K S Radhkrishnan slams Vaiko and others in Eelam issue

அவரது பேச்சு...

ஈழத் தமிழர்கள் பிரச்சினைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். யாரால், எவரால் என்று கேள்வி கேட்டால், தலைவர் கலைஞரால்.

இலங்கையில் ஈழப்பிரச்சனை 1983ல் உருவெடுத்தது. அங்குள்ள தமிழர்கள், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சென்றார்கள். திமுகவில் அண்ணா காலத்தில் 1956ல் சிதம்பரத்தல் நடந்த பொதுக்குழுவில் கலைஞர் தான் ஈழத்தமிழர்களுக்கான தீர்மானத்தை முன்மொழிந்தார்.

ஐ.நா.மன்றத்தில் முதன் முதலாக இந்த பிரச்சனை எழுப்பப்பட வேண்டும் என்று 1971ல் தூத்துக்குடியில் பொதுக்குழுவில் கலைஞர் முன்மொழிந்தார். சென்னையில் மிகப்பெரிய பேரணி நடைபெற்றது. நடத்தியது கலைஞர். பேரணியின் இறுதியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தாய் தமிழகம், ஈழத்தமிழர்களை காப்பாற்ற வேண்டும். அதனுடைய கடமை தமிழகத்திற்கு உண்டு என்ற தீர்மானத்தை கொண்டு வந்தார்.

இந்த உண்மைகள் எல்லாம் யாருக்காவது தெரியுமா. இன்று முச்சந்திகளில் நின்று கத்துகிறார்களே சிலர். பெயர் சொல்ல விரும்பவில்லை. நேற்று மு.க.ஸ்டாலின் முகநூலில் ஒரு கருத்து சொல்லியிருக்கிறார். நளினிக்கு பரோல் கொடுக்கவில்லை ஜெயலலிதா ஆட்சியில். அது தவறு என்று கண்டித்து குறிப்பிட்டிருக்கிறார்.

இதே திமுக ஆட்சியில், கலைஞர் ஆட்சியில் பரோல் கொடுக்கவில்லை என்றால் இந்த ஜாம்பாவான்கள், பயில்வான்கள் மேலும், கீழும் குதிப்பார்களே. இன்றைக்கு ஏன் குதிக்கவில்லை. சூடு இல்லையா, சொரணை இல்லையா.

முள்ளிவாய்க்கால் முடிந்தவுடன் கத்தினார்களே. ஏதோ ஏவுகணைகள் கோபாலபுரம், அறிவாலயத்தில் இருந்து அனுப்பியதாக சொன்னார்களே. நமக்கு எதுவும் தெரியாது. அது மத்திய அரசுதான் பார்க்கும். அன்றைக்கு நடந்தது இதுதான்.

நாடாளுமன்ற தேர்தல் களம். மருத்துவமனையில் இருந்து வந்துள்ளார். உண்ணாவிரதம் இருந்தார் கலைஞர். பிரணாப் முகர்ஜியும், ப.சிதம்பரமும் உறுதிமொழியை கொடுத்தார்கள். அந்த உறுதிமொழியை நம்பி கலைஞர் உண்ணாவிரதத்தை நிறுத்தனார். ஆயுதங்கள் கீழே போடப்பட்டன. அங்கு போர் இல்லை. நிலைமை சகஜமாக இருக்கிறது என்று உறுதி கொடுத்தது மத்திய சர்கார். அதனை நம்பி கலைஞர் உண்ணாவிரத்தை நிறுத்தினார்.

ஈழத்தமிழர்கள் பிரச்சனையில் என்ன செய்ய வேண்டும். இன்றைக்கு சர்வதேச சுதந்திரமான விசாரணை வேண்டும். அதுதான் டெசோவின் நிலைப்பாடு. திமுகவின் நிலைப்பாடு. அதுமட்டுமல்லாமல் அங்கு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். அந்த வாக்கெடுப்பு வடக்கு, கிழக்கு மாநிலங்கள், புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் ஐ.நா.மேற்பார்வையில் நடத்த வேண்டும்.

ஈழத்தமிழர்களுக்காக திமுக இழந்தது அதிகம். லண்டன் மாநாட்டில் டி.கே.எஸ். இளங்கோவனும், நானும் கலந்து கொண்டோம். எங்களிடம் ஒரு கேள்வியை வைத்தார்கள். முள்ளிவாய்க்கால் சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்தீர்களே என்று கேட்டார்கள்.

அதற்கு நான், முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை. ஈழத்தமிழர்களுக்காக நாங்கள் இரண்டு முறை ஆட்சியை இழந்தோம். வேறு பல பழிகளும் எங்கள் மீது போடப்பட்டன. கடந்த காலங்களிலும் நாங்கள் ஈழத்தமிழர்களுக்காக பலவற்றை இழந்துள்ளோம். இதேபோல் வை கோபாலசாமிக்கோ, சீமானுக்கோ, நெடுமாறனுக்கோ ஏதாவது இழப்பு ஏற்பட்டதா?

எவ்வளவு இழப்பு ஏற்பட்டாலும் நம்முடைய தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள் வாழவேண்டும் என்பதற்காக எல்லாவிதமான முயற்சிகளையும் கலைஞர் எடுத்து வருகிறார் என்றார் அவர்.

English summary
DMK leader K S Radhkrishnan slammed MDMK chief Vaiko and others in Eelam issue during his speech in DMK state conference in Trichy today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X