For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓய்வு பெற்றார் வீரப்பன் புகழ் ஐபிஎஸ் அதிகாரி கே.விஜயகுமார்

ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் ஓய்வு பெற்றார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ஓய்வு பெற்றார் ஐபிஎஸ் அதிகாரி கே.விஜயகுமார்- வீடியோ

    சென்னை: போலீஸ் அதிகாரியான விஜயகுமார் நேற்று பணி ஓய்வு பெற்றார்.

    தமிழக ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் முதலில் பட்டுக்கோட்டை உதவி போலீஸ் கண்காணிப்பாளராக 1975-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். அதைத் தொடர்ந்து தருமபுரி, சேலம் மாவட்டங்களில் போலீஸ் எஸ்பியாக பணியாற்றினார்.

    பின்னர் மத்திய அரசு பணிக்காக அனுப்பப்பட்ட விஜயகுமார், அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தியின் மெய்க்காவல் படை தலைவராக பணியாற்றினார். பின் மீண்டும் தமிழக பணிக்கு திரும்பி திண்டுக்கல் போலீஸ் எஸ்பி ஆனார்.

    மாநகர போலீஸ் கமிஷனர்

    மாநகர போலீஸ் கமிஷனர்

    1991-இல் ஜெயலலிதா முதல்வர் ஆனதும் அவரது மெய்க்காவல் படை தலைவராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா 2001-ல் மீண்டும் முதல்வரான பிறகு கே.விஜயகுமார் சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஆனார்.

    என்கவுன்ட்டர் புகழ்

    என்கவுன்ட்டர் புகழ்

    அவர் போலீஸ் கமி‌ஷனராக இருந்தபோது சென்னையில் 15-க்கும் மேற்பட்ட ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. போலீஸ் கமி‌ஷனராக இருந்த நிலையில் 2003-ம் ஆண்டு சந்தனக்கடத்தல் வீரப்பனை பிடித்த கமாண்டோ படையின் தலைவர் ஆனார்.

    சிறப்பு பணி நீட்டிப்பு

    சிறப்பு பணி நீட்டிப்பு

    2004-ல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன்பிறகு கே.விஜயகுமார் மீண்டும் மத்திய பணிக்கு அனுப்பப்பட்டார்.
    2012-ம் ஆண்டு மத்திய ஆயுதப்படை போலீசில் டைரக்டர் ஜெனரலாக பணியாற்றியபோது அவர் பணி ஓய்வுபெற்றார். அவரது சிறப்பான பணித்திறனை பாராட்டி அவருக்கு சிறப்பு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

    பணி ஓய்வு

    பணி ஓய்வு

    சிறப்பு பணிக்காக மத்திய உள்துறையில் சேர்க்கப்பட்ட அவர் நக்சலைட்டுகளுக்கு எதிரான வியூகம் வகுக்கும் பணியை மேற்கொண்டு வந்தார். 6 ஆண்டுகாலம் பணிநீட்டிப்பில் பணியாற்றிய கே.விஜயகுமார் நேற்று அந்த பணியில் இருந்து ஓய்வுபெற்றார்.

    English summary
    K.Vijayakumar who encounters Santhana kadaththal Veerappan retires from his police service.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X