For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஷாக்கிங்.. ரஜினி பட வரலாற்றிலேயே மிகவும் குறைந்த முதல் நாள் வசூல்.. காலாவுக்குத்தானாம்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    காலா முதல் நாள் வசூல் நிலவரத்தை பற்றி விஷால்- வீடியோ

    சென்னை: சமீபகாலத்தில் ரஜினிகாந்த் திரைப்படங்களில் காலா படத்திற்கு குறைவான முதல்நாள் வசூல் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து நேற்று உலகம் முழுக்க காலா திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது. கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் எதிர்ப்பால் மாலைக்கு மேல்தான் சில தியேட்டர்களில் ஷோக்கள் காட்டப்பட்டன.

    இதன் காரணமாக, ரஜினி படங்களில் சமீபகாலத்தில் மிகவும் குறைவான முதல் நாள் வசூல் பெற்ற படம் என்ற நிலை காலா படத்திற்கு ஏற்பட்டுள்ளது.

    பிரச்சாரமே பிரதானம்

    பிரச்சாரமே பிரதானம்

    பா.ரஞ்சித் இயக்கத்தில் இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடித்து வெளியான, கபாலி என்ற திரைப்படம் தீவிர ரசிகர்களை கூட கொட்டாவி விட வைத்தது. இதே காம்பினேஷனில் காலா திரைப்படம் ரிலீஸ் ஆனதால் ரசிகர்களிடம் கூட எதிர்பார்ப்பு குறைந்துவிட்டது. காலா திரைப்பட பாடல்கள் முழுக்க சில சித்தாந்தங்களை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யும் பாடல் போல இருந்ததால் படத்தின் கதையை முன்கூட்டியே ரசிகர்கள் புரிந்து கொண்டனர்.

    மெட்ராஸ் திரைக்கதை

    மெட்ராஸ் திரைக்கதை

    பொதுவான ரசிகர்களும் அலர்ட் ஆகிவிட்டனர். ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படத்தில் தான் சொல்ல வந்த கருத்தியலை குறியீடுகளுடன் சொல்லியிருப்பார். ஆனால் அசத்தலான அந்த திரைக்கதைக்கு கருத்தியல் குறிக்கிடாது. இதனால் அது சூப்பர் ஹிட் ஆனது. ஆனால், கபாலியில், சொல்ல வந்த கருத்தை காட்சிகளில் சொல்லாமல் பேசி பேசியே படம் பார்க்க வந்தவர்களுக்கு போர் அடிக்க செய்திருப்பார். காலாவின் பாடல்களும் பிரச்சார தொனியில் இருந்ததால் கபாலி-2 என்ற நிலைக்கு மக்கள் வந்ததுதான் முதல் நாளில் தியேட்டர் பக்கம் நிறைய பேர் போகாததற்கு காரணம் என தெரிகிறது.

    இயக்குநர் மீதான எதிர்பார்ப்பு

    இயக்குநர் மீதான எதிர்பார்ப்பு

    செய்தி ஏஜென்சி ஒன்றிடம், தமிழ் சினிமா தயாரிப்பாளர் கவுன்சில் உறுப்பினர் விஷால் கிருஷ்ணா கூறுகையில், "காலா திரைப்படத்தின் வசூல் மிக குறைவாக இருக்கிறது என நினைக்கிறேன். இதற்கு காரணம், இதற்கு முன்பு இதே இயக்குநருடன் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் வரவேற்பை பெறவில்லை என்பதுதான்" என்றார்.

    பல காரணங்கள்

    பல காரணங்கள்

    சினிமா வர்த்தக ஆய்வாளர் அதுல் மோகன் கூறுகையில், ரஜினிகாந்த் நடித்த முந்தைய படங்களின் கமர்சியல் ரிசல்ட் காரணமாக காலாவுக்கு பொது ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் இல்லை. காலாவின் புரமோஷன் காட்சிகள் ஹிந்தி ரசிகர்களை படத்துடன் இணைப்பதாக இல்லை. இதனால் வட இந்தியாவிலும் வசூல் குறைந்திருக்கலாம். அடுத்த வாரம் சல்மான்கான் நடித்து பெரும் எதிர்பார்ப்புடன் ரேஸ்-3 திரைப்படம் வெளியாக உள்ளதும் இதற்கு ஒரு காரணம். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ஜுராசிக் வேல்ட்: தி ஃபாலன் கிங்டம் படத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது, இவையெல்லாம் காலா வசூலில் கோட்டைவிட காரணம் என்றார்.

    சென்னையில் மட்டும் சாதனை

    சென்னையில் மட்டும் சாதனை

    இது ஒட்டுமொத்த நிலவரம். அதேநேரம், சென்னை பாக்ஸ் ஆபீசில் காலா புதிய சாதனையை படைத்துள்ளது. முதல் நாளில் சென்னையில் காலா படத்திற்கு ரூ.1.76 கோடி வசூல் கிடைத்துள்ளது. விஜய் நடித்த மெர்சல், முன்னதாக ரூ.1.52 கோடியுடன் முதலிடத்தில் இருந்தது. அதை காலா முறியடித்துள்ளது. அஜீத் நடித்த விவேகம் ரூ.1.21 கோடி, முதல் நாள் வசூலை சென்னையில் ஈட்டியிருந்தது.

    English summary
    Kaala recorded the lowest ever opening for a Rajinikanth film in recent times, says sources.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X