For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கபாலி டிக்கெட் ரூ.5000?... இணையத்தில் ரிலீஸ் ... தியேட்டர்களில் ரெய்டு...: ரசிகர்கள் அதிர்ச்சி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சாமான்ய ரஜினி ரசிகனுக்கு கபாலி படம் பார்க்க டிக்கெட் கிடைக்கவில்லை. எல்லா டிக்கெட்டுகளும் கார்ப்பரேட்டுகள் கைக்கு போய்விட்டது. ஒரு சில தியேட்டர்களில் ரூ. 5000த்திற்கு பிளாக்கில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினியை தியேட்டரில் காண கட் அவுட் வைத்து பாலபிஷேகம் செய்யும் தங்களுக்கு டிக்கெட் இல்லையே என்பது பல ரசிகர்களின் குமுறலாக உள்ளது. என்னதான் கேஸ் போட்டாலும்... அடக்குனா அடங்குற ஆளா நாங்க... என்று கூறி கபாலியை இணையத்தில் ரிலீஸ் செய்து விட்டனர்.

சென்னையில் பல்வேறு திரையரங்குகளில் கபாலி திரைப்படத்திற்கான டிக்கெட் அதிக விலைக்கு விற்கப்பட்டது என்றும், டிக்கெட் கிடைக்கவில்லை என்றும் பரவலாக புகார்கள் எழவே அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

ரூ. 500 முதல் ரூ. 5000 வரை

ரூ. 500 முதல் ரூ. 5000 வரை

இன்று தமிழகத்தில் மட்டும் 600 திரையரங்குகளில் கபாலி வெளியாகியுள்ளது. சில திரையங்குகளின் கவுண்டர்களில் ரூ. 500 க்கு டிக்கெட் விற்கப்பட்டுள்ளது. டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் படத்தின் தயாரிப்பாளர் தாணுவை குற்றம்சாட்டினர். படத்தின், ஒரு வாரத்திற்கான டிக்கெட் கிடைப்பது அரிதான நிலையில், முதல் நாள் காட்சிக்கான டிக்கெட் கள்ளச்சந்தையில், 5,000 ரூபாய் வரை விற்பனையானது.'

திரைப்பட விநியோகம்

திரைப்பட விநியோகம்

சில திரையரங்குகளில் கபாலி பட டிக்கெட் விலை ஆயிரம் முதல் 2000 வரை அதிக விலைக்கு விற்கப்பட்டது என்று கூறப்பட்ட நிலையில், இந்தப் படத்தின் விநியோகஸ்தரான சசிகலா, இளவரசியின் ஜாஸ் நிறுவனத்திடம் இருந்து இந்தப் படத்தை ஏஜிஎஸ் வாங்கி தமிழகம் முழுவதும் விநியோகம் செய்தது. ஏஜிஎஸ் இந்தப் படத்தின் டிக்கெட்டை அதிக விலைக்கு ஐடி மற்றும் பெரிய கார்பரேட் நிறுவனங்களுக்கு விற்று இருப்பதாக செய்தி வெளியானது.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

மல்டி பிளக்ஸ்' தியேட்டர்களில், கார்ப்பரேட் நிறுவனங்கள் 'கபாலி' படத்தின் டிக்கெட்களை மொத்தமாக முன்பதிவு செய்தன. இதனால், ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். முதல் நாள் காட்சிக்கான டிக்கெட்களை பெற, பெரும்பாலான ரசிகர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. பல தியேட்டர்களின் கவுன்டர்களிலேயே, குறைந்தபட்சம், 500 ரூபாய் முதல் டிக்கெட் விற்பனையானது.

அமைச்சர் உதவியாளர்

அமைச்சர் உதவியாளர்

சென்னையில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில், கபாலி படத்தின், 10 டிக்கெட் கேட்டு, தமிழக செய்தித்துறை அமைச்சரின் முதன்மை உதவியாளர், தியேட்டர் மேலாளருக்கு கடிதம் எழுதி, அந்த கடிதம், வாட்ஸ் ஆப்பில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த உதவியாளர், பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சென்னையில் சோதனை

சென்னையில் சோதனை

கபாலி பட டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து சென்னையில் ஆல்பர்ட், ஈகா, ஏஜிஎஸ் உள்ளிட்ட 18 தியேட்டர்களில் இன்று விற்பனை வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனால் தியேட்டருக்கு வந்த ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

பல்க் புக்கிங்

பல்க் புக்கிங்

ஏ.ஜி.எஸ் சினிமாஸ் நிறுவனத்திடம், பிரபல தனியார் நிறுவனம் ஒன்று, 'கபாலி' படத்திற்காக, ஒரு டிக்கெட், 500 ரூபாய் வீதம், 200 டிக்கெட்களுக்கு சர்வீஸ் சார்ஜ் உடன் சேர்த்து, ஒரு லட்சத்து, 2,500 ரூபாய் பணம் கட்டியுள்ளது. இதற்கான ரசீதும் சமூக வலைத்தளங்களில் நேற்று பரவியது.

அதிகாரிகள் சோதனை

அதிகாரிகள் சோதனை

ஈரோட்டில், 'கபாலி' படம் வெளியாக உள்ள தியேட்டர்களில், கூடுதல் கட்டணம் வசூல் செய்வது தொடர்பாக, ஆர்.டி.ஓ. நர்மதா தேவி, டி.எஸ்.பி., சம்பத், தாசில்தார் வன்னியசெல்வம் மற்றும் வணிக வரித்துறையினர், சோதனை மேற்கொண்டனர். இதில், தேவி அபிராமி தியேட்டரில் அதிகபட்சமாக, 700 ரூபாய்க்கு டிக்கெட் விற்றது தெரியவந்தது.

இணையத்தில் வெளியான படம்

இணையத்தில் வெளியான படம்

கபாலி படத்தை ஆன்லைனில் வெளியிடக்கூடாதென படத்தின் தயாரிப்பாளர் தாணு, நீதிமன்றத்தை அணுகி இருந்தார். அதன்படி, பல இணையதளங்கள் முடக்கப்பட்டன. தற்போது நீதிமன்ற தடை உத்தரவு அனைத்தையும் மீறி இணையத்தில் முழு படமும் வெளியாகி உள்ளது. இதுவும் ரஜினி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை தொலைத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

English summary
Ticket prize of the Kabali movie has shocked the fans and movie buffs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X