For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரையை கலக்கும் 'கபாலி' சுவர் ஓவியங்கள் !

By Karthikeyan
Google Oneindia Tamil News

மதுரை: நடிகர் ரஜினி நடித்த கபாலி படம் வெளியாகவுள்ளதால் மதுரையில் போட்டி போட்டுக்கொண்டு ரசிகர்கள் சுவர் விளம்பரங்களை வரைந்து வருகின்றனர்.

போஸ்டர் ஒட்டுவது, சுவர் ஓவியங்கள் வரைவதில் மதுரைக்காரர்களை யாரும் மிஞ்சமுடியாது. இந்த கலாச்சாரம் வேறூன்றி, செழித்து வளர என்றும் பெருந்துணையாய் இருப்பவர்கள் நம் திரை உலக நாயகர்கள் தான்.

kabali wall drawing in madurai

சிவாஜி, எம்ஜிஆர், ரஜினி, கமல், அஜித், விஜய் வரை தீபாவளிக்கு அவர்கள் தலைவர் படம் ரிலீசானால் போதும், போஸ்டர்கள் தொடங்கி கட் அவுட், கொடி, தோரணம், பாலாபிஷேகம் என கலக்குவார்கள். என்னதான் நவீன தொழில் நுட்பத்தில் போஸ்டர்கள், டிஜிட்டல் பேனர்கள், கொடி, தோரணம் வந்தாலும் மதுரையை பொறுத்தவரை இன்னமும் சுவர் விளம்பரங்கள் ஆங்காங்கே காட்சி அளித்து கொண்டுதான் உள்ளன.

kabali wall drawing in madurai

இந்நிலையில், நடிகர் ரஜினி நடிப்பில் கபாலி படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பையும் சாதனையையும் படைத்தது. விரைவில் கபாலி படம் வெளியாகவுள்ளதை அடுத்து மதுரையில் ரஜினி ரசிகர்கள் வித்தியாசமான முறையில் ரஜினி விளம்பரங்களை வரைந்து வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக மதுரை புட்டுத்தோப்பு மெயின் ரோட்டில் கேப்ரன்ஹால் பள்ளி அருகே ரஜினியின் பழைய ஸ்டைலில் ஒரு ஓவியம் வரையப்பட்டுள்ளது. பெரியார் நிலையம், கோரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ரஜினி ரசிகர்கள் விதவிதமான சுவர் விளம்பரங்களை வரைந்துள்ளனர்.

1990 களில் நடித்த ரஜினி முதல் தற்போதைய ரஜினியின் தோற்றம் வரை பல வண்ணங்களில் சுவர் விளம்பரம் வரையப்பட்டு வருவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Different style rajini images drawing in madurai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X