For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மறக்க முடியாத நட்பு பறவைகள்.. காவிரி தந்த தவ புதல்வர்கள் கலைஞரும்- நடிகர் திலகமும்!

சிவாஜி-கலைஞர் நட்பு மிகவும் ஆழமாக இருந்தது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கலைஞரும்- நடிகர் திலகமும்!- வீடியோ

    சென்னை: காவிரி தந்த தலைதாயின் மகன்கள்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், கலைஞர் கருணாநிதியும்.

    திராவிடர் கழக நடிகர்களில் ஒருவராக இருந்தபோதிலிருந்தே சிவாஜிக்கு கலைஞருடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு சிவாஜியின் எதிர்கால வாழ்க்கையை ஒளிமயமாக மாற்றியது.

    1952-ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் வீசிய புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக சார்பில் நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக கலைஞர் எழுதிய "தூக்கு மேடை" நாடகம் நடத்தப்பட்டது. இதில் கலைஞரும் நடிகர் திலமுகம் இணைந்து நடித்தார்கள். அதே ஆண்டில் "பராசக்தி" படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதும் பொறுப்பை ஏற்றார் கலைஞர்.

     கலைஞரின் பங்கு

    கலைஞரின் பங்கு

    குணசேகரனாக நடிக்கும் வாய்ப்பு சிவாஜிக்கு வந்தது. ஆனால் சிவாஜி கணேசன் நடித்த சில காட்சிகள் 'பராசக்தி'யின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஏவிஎம் செட்டியாருக்கு திருப்தியளிக்கவில்லை. எனவே சிவாஜியை மாற்றி வேறு நடிகரை போட வேண்டும் என்று கண்டிப்பாய் சொல்லிவிட்டார். ஆனால் கலைஞரும், நேஷனல் பெருமாளும், இயக்குனர்கள் கிருஷ்ணன்-பஞ்சுவும் உறுதியாக நின்று சிவாஜியையே நடிக்க வைத்தார்கள். பராசக்தி படத்தின் தகவல்கள் அனைத்தும் கலைஞரின் 'நெஞ்சுக்கு நீதி'யில் அறிய முடிகிறது.

     திக்குமுக்காடிய ரசிகர்கள்

    திக்குமுக்காடிய ரசிகர்கள்

    எனவே சிவாஜி கணேசனை திரையுலகில் அறிமுகம் செய்ததிலும், கதாநாயகனாக உயர்த்தியதிலும் கலைஞருக்கு பெரும் பங்கு உண்டு. கலைஞரின் கூர்மையான - ஆற்று நீரைப்போன்ற தெளிவான - மேகங்களை கிழித்து செல்லும் இடிமுழக்கமான வசனங்கள்தான் பராசக்தியின் வெற்றிக்கு அடிப்படை காரணமாக இருந்தது. அதற்கு பிறகு திரும்பிப்பார், பணம், மனோகரா, ரங்கோன்ராதா, புதையல், குறவஞ்சி என கலைஞர்-சிவாஜியின் கூட்டு உழைப்பால் உருவான படங்களை கண்டு தமிழ் ரசிகர்கள் திக்குமுக்காடி போய்விட்டனர்.

     மயக்கிய மனோகரா

    மயக்கிய மனோகரா

    திரும்பிபார், மனோகரா இரண்டும் வெள்ளித்திரையை வசனமழையால் நனைத்த படங்கள் ஆகும். அழுத்தம் திருத்தமாக உரிய ஏற்ற இறக்கத்தோடு அதற்குரிய உணர்ச்சிப்பெருக்காடு சிவாஜி முழங்கிய வசனங்கள் ரசிகர்களை - குறிப்பாக இளைஞர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. அரசனை மயக்கி தன் பிடியில் வைத்திருக்கும் வசந்தசேனை பற்றி தன் தாயிடம் மகன் மனோகரன் குமுறுகிறான்:

     தெறிக்க விட்ட சிவாஜி

    தெறிக்க விட்ட சிவாஜி

    "புரையோடி விட்ட புண்ணுக்குப் புனுகுப்பூச்சு, பொல்லாங்குக்காரியின் போலி வேடத்தை பொசுக்கப் பொறுமை! போதுமம்மா பொறுத்ததெல்லாம்- உத்திரவு கொடுங்கள்.. உருத்தெரியாமல் ஆக்குகிறேன் அந்த ஊர் கெடுப்பவளை!"
    "பரம்பரைக்கேற்பட்ட களங்கம் பாண்டியன் முத்து விஜயனால் மட்டுமல்ல, பாதகி வசந்தசேனையாலும்தான்.. ஏமாந்த காலத்தில் வெற்றி முரசு கொட்டிய வெறியனை மட்டுமல்ல, உங்கள் இன்ப வாழ்வில் குறுக்கிட்ட வஞ்சகியையும் விட்டு வைக்காது இந்த வாள்!"-என்று கலைஞரின் வரிகளை வீரியத்தோடு தெறிக்கவிட்டார் சிவாஜி.

     நண்பனுக்கு சிலை

    நண்பனுக்கு சிலை

    இதற்கு பிறகு கலைஞர் வசனங்களை பேசக்கூடிய பொருத்தமான நடிகர் சிவாஜிதான், சிவாஜிக்கு ஏற்ப பொருத்தமாக எழுதக்கூடியவர் கலைஞர் ஒருவர்தான் என்பது அனைத்து தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மையாயிற்று. சிவாஜியின் மீது கொண்டிருந்த தீராத அன்பினாலும், நட்பினாலும் 2006-ல் கருணாநிதி முதல்வர் ஆனதும் கடற்கரை சாலையில் சிவாஜி கணேசனுக்கு சிலையை வைத்து மகிழ்ந்தார்.

     நட்பு பறவைகள்

    நட்பு பறவைகள்

    ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. அதில் கலைஞரும், சிவாஜியும் உட்கார்ந்திருக்கிறார்கள். கலைஞரை விட வயதில் சிறியவரான சிவாஜி இவ்வாறு பேசுகிறார்: "நீ இன்னும் நீண்ட நாட்கள் வாழ வேண்டும்.. நண்பனே, என் வயதில் இரண்டை நீ எடுத்துக் கொள். அதற்கு மேலும் என்னால் கொடுக்க முடியாது. ஏனெனில், அதுவரை நானே இருப்பேனோ இல்லையோ".... இதை சொன்ன 3 வருடங்களில் சிவாஜியின் உயிர் பிரிந்துவிட்டது.

    மறக்க முடியாத நட்பு பறவைகள் கலைஞரும்- நடிகர் திலகமும்!

    English summary
    Kalaignar and Sivaji's friendship
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X