For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

14 ஆண்டாக சுற்றி திரிந்த மனநலம் பாதித்தவர்.. கட்டிங், சேவிங் செய்து குடும்பத்திடம் ஒப்படைத்த காவலர்

Google Oneindia Tamil News

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மனநலம் பாதிக்கப்பட்டு அடையாளம் தெரியாமல் 14 ஆண்டுகளாக சுற்றித் திரிந்த நபரை அழகுப்படுத்தி அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்த கீழ்குப்பம் போலீஸாருக்கு அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கீழ்குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூகையூர் கிராமத்தில் கொரானா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்த கீழ்குப்பம் காவல் நிலைய தலைமை காவலர் கருப்பையா பணியின் போது அப்பகுதியில் மனநலம் பாதித்து அழுக்கு சட்டை மற்றும் முகத்தில் தாடியுடன் சுற்றித்திரிந்த ஒருவரை கண்டறிந்தார். இவருடன் உதவி ஆய்வாளர் ஏழுமலை உதவி செய்தார்.

வேலூர் திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா .. 2 நாளில் 3 திமுக எம்எல்ஏக்கள் பாதிப்புவேலூர் திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா .. 2 நாளில் 3 திமுக எம்எல்ஏக்கள் பாதிப்பு

4 புகைப்படங்கள்

4 புகைப்படங்கள்

அவரை அழைத்து வந்து முகச்சவரம் செய்து அழகுப்படுத்தி புத்தாடை வழங்கி கடந்த 3 மாதத்துக்கு மேலாக அவருக்கு இருப்பிடம் மற்றும் உணவு அளித்து வந்தார். இந் நிலையில் கடந்த சில தினங்களாக இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் 9498166806 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு அனைத்து வலைத்தளத்திலும் தலைமைக் காவலர் கருப்பையா விளம்பரம் கொடுத்து அந்த நபரின் 4 புகைப்படங்களை அனுப்பி உள்ளார்.

விளம்பரம்

விளம்பரம்

அந்த புகைப்படத்தில் முகத்தில் தாடியுடன் இருக்கும் போதும எடுக்கப்பட்டதும், முகச் சவரம் செய்யப்பட்டவுடன் எடுக்கப்பட்டதும் என சேர்த்து அனுப்பி வைத்தார். இதனை அநத நபரின் உறவினர்கள் கண்டு கொண்டனர். இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டம் புதுப்பட்டு கிராமத்தில் இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட நபர் சின்னனின் மனைவி மணி மற்றும் அவர்களின் உறவினர்கள் ஆகியோர் விளம்பரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு வந்தனர்.

அடையாளம் கண்ட உறவினர்கள்

அடையாளம் கண்ட உறவினர்கள்

அப்போது காணாமல் போன சின்னன் தனது கணவர் என்றும் அந்த நபர் எங்கள் உறவினர்தான் என்றும் அடையாளம் கண்டு கொண்டனர். இதையடுத்து தலைமை காவலர் கருப்பையா மற்றும் அங்கிருந்து உதவி ஆய்வாளர் ஏழுமலை ஆகியோருக்கு சால்வை அணிவித்து பாராட்டுகளும் நன்றிகளும் தெரிவித்தனர்.

பேஸ்புக்

பேஸ்புக்

இதுகுறித்து அந்த நபரின் உறவினரின் கூறுகையில் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பாக சின்னன் என்பவர் கிணற்றில் விழுந்து மனநிலை பாதிக்கப்பட்டார். அவரை கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அழைத்து வந்த போது காணாமல் போய்விட்டார். தற்போது இந்த இரு காவலர்களின் உதவியால் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என சமூக வலைதளத்தில் பார்த்து அவரை அடையாளம் கண்டு கொண்டோம். அவரை வீட்டுக்கு அழைத்து சென்று பார்த்துக் கொள்கிறோம் என்றும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

English summary
Kallakuruchi Police has done a tremendous job to reunite a mentally challenged man with his family.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X