For Quick Alerts
For Daily Alerts
Just In
நடிகர் கமல்ஹாசன் பிப்.21-ல் கட்சி பெயர் அறிவிப்புடன் சுற்று பயணம் தொடங்குகிறார்
நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 21-ந் தேதி தமது கட்சிப் பெயரை அறிவிக்க உள்ளார்.
Recommended Video
சொந்த ஊரில் அதிரடியாக அரசியல் களம் இறங்கும் கமல்
சென்னை: நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 21-ந் தேதி தமது கட்சிப் பெயரை அறிவித்து சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தைத் தொடர்ந்து கமல்ஹாசனும் அரசியல் பிரவேசத்தை வெளியிட்டார். தற்போது பிப்ரவரி 21-ந் தேதி தமது கட்சியின் பெயரை அறிவித்து சுற்றுப் பயணத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில், பிப்ரவரி 21-ந் தேதி கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளேன். அதனைத் தொடர்ந்து ராமநாதபுரத்தில் இருந்து மக்களை சந்திக்கும் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறேன்.
ராமநாதபுரத்தில் தொடங்கி மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க உள்ளேன். மக்கள் ஆதரவுடன் இந்த சுற்றுப் பயணத்தை தொடங்குகிறேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Comments
English summary
Actor Kamal Haasan will announce his party name on Feb 21.
Story first published: Wednesday, January 17, 2018, 0:38 [IST]