• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நேரில் உங்களை சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சி டிவியில் கிடைப்பதில்லை- கமல்

|
    மக்கள் நீதி மய்யம் எட்டு கிராமங்களை தத்தெடுத்து இருக்கிறது. கமல் பெருமிதம்

    திருப்பூர்: நேரில் உங்களையெல்லாம் சந்திக்கும் இந்த மகிழ்ச்சி எனக்கு டிவியில் கிடைக்காது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

    மக்களை சந்திப்பதற்காக கமல்ஹாசன் இன்றைய தினம் திருப்பூர் மாவட்டத்துக்கு செல்கிறார் என்று கூறப்பட்டது இந்நிலையில் அவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எல்லபாளையம் கிராமத்துக்கு சென்றார். செல்லும் வழியில் உள்ள நல்லதங்காள் ஓடையை பார்வையிட்ட கமல், எல்லம்பாளையத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

    இவர் தத்தெடுத்த 8 கிராமங்களில் ஒன்று எல்லப்பாளையம் கிராமம் ஆகும். இவர் அங்கு மக்களிடம் பேசுகையில், என்ன வேண்டுமானலும் கொடுத்து, என்ன வேண்டுமானாலும் சொல்லி கூட்டத்தை கூட்டுவார்கள். ஆனால் இது அன்பால் சேர்ந்த கூட்டம்.

    நேர்மையின் அடையாளம்

    நேர்மையின் அடையாளம்

    நான் உங்களை நம்பியே நாளை நமது என்று இருக்கிறேன். மக்கள் நீதி மய்யம் கட்சி எஞ்சியிருக்கும் நேர்மையின் அடையாளம் என்று நீங்கள் நம்புகிறீர்கள்.நான் மறுபடியும் வருவேன்.

    மக்கள் கூட்டம்

    மக்கள் கூட்டம்

    உங்கள் அன்பிற்கு கடமைப்பட்டுள்ளேன். நேரில் உங்களையெல்லாம் சந்திக்கும் இந்த மகிழ்ச்சி எனக்கு டிவியில் கிடைக்காது. வெயிலில் நிற்கும் இந்த அன்பு உன்னதமானது. பிக்பாஸும் சினிமாவும் எனக்கு புகழைத் தேடித் தரலாம். ஆனால் நேரில் இங்கே வந்திருக்கும் இந்த மக்கள் கூட்டம் தான் எனக்கு அன்பை தருகிறது.

    அரசியல்வாதிகளுக்கு

    அரசியல்வாதிகளுக்கு

    நான் மட்டும் தனியே எதுவும் செய்துவிட முடியாது. நீங்களும் என்னுடன் இணைந்து செய்ய வேண்டும். மாணவர்கள் அரசியல் புரிந்து கொள்வார்கள் என்று அரசியல்வாதிகளுக்கு பயம் வந்து விட்டது.

    மறந்துவிடாதீர்

    மறந்துவிடாதீர்

    அதை சொல்வதற்காகவே இங்கு உங்கள் முன் வந்திருக்கிறேன். நாளைய பற்றிய சிந்தனையை மாணவர்கள் சிந்திக்க வேண்டும். நாளைய தமிழகத்தை உருவாக்கும் வலிமை உங்களிடம் இருக்கிறது அதை மறந்துவிடாதீர்கள் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

    திருப்பூர் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே!
    வருடம்
    வேட்பாளர் பெயர் கட்சி லெவல் வாக்குகள் வாக்கு சதவீதம் வெற்றி வித்தியாசம்
    2019
    சுப்பராயன் சிபிஐ வென்றவர் 5,08,725 45% 93,368
    எம்எஸ்எம் ஆனந்தன் அஇஅதிமுக தோற்றவர் 4,15,357 37% 93,368
    2014
    வி. சத்யபாமா அஇஅதிமுக வென்றவர் 4,42,778 43% 1,79,315
    என். தினேஷ்குமார் தேமுதிக தோற்றவர் 2,63,463 25% 0
    2009
    சிவசாமி சி அஇஅதிமுக வென்றவர் 2,95,731 40% 85,346
    கார்வேந்தன் எஸ் கெ காங்கிரஸ் தோற்றவர் 2,10,385 28% 0

     
     
     
    English summary
    Kamal haasan expresses his happiness on seeing the people in person.

    நாள் முழுவதும் oneindia
    செய்திகளை உடனுக்குடன் பெற

    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more