For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெரம்பலூர் ஏழை மாணவியின் மருத்துவர் கனவை நனவாக்கிய கமல்.. ரூ. 5 லட்சம் நிதியுதவி

Google Oneindia Tamil News

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவர் படிப்பை தொடர முடியாமல் தவித்த கனிமொழிக்கு கமல்ஹாசன் ரூ 5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

Kamal Haasan extends help to Perambalur Kanimozhi

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைமணி. இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு கனிமொழி (21) என்ற மகள் உள்ளார். இவர் பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் நான்காம் ஆண்டு படித்து வருகிறார்.

Kamal Haasan extends help to Perambalur Kanimozhi

கடந்த 2014-ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 1127 மதிப்பெண்கள் பெற்றார். 191.05 கட்ஆப் பெற்றிருந்தார். அவருக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் மருத்துவம் பயில இடம் கிடைத்தது. 4-ஆம் ஆண்டு படித்து வரும் மாணவிக்கு அடுத்த ஆண்டுக்கான கல்விக் கட்டணம், தேர்வு கட்டணம் ஆகியவை கட்ட முடியாமல் தவித்து வந்தார்.

Kamal Haasan extends help to Perambalur Kanimozhi

அவரது தந்தையோ விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இதனால் மாணவியின் படிப்பு கேள்விக்குறியானது. இதுகுறித்து தகவலறிந்த கமல்ஹாசன் மாணவியை சந்தித்து ரூ. 5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

[ டாக்டர் கனவில் கனிமொழி.. கையிலோ பணமில்லை.. காட்டு வேலை செய்யும் பரிதாபம்.. உதவுங்கள் மக்களே ]

English summary
Kamal haasan extends help to Perambalur Kanimozhi who cannot pay the final year fees in medical college.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X