For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜாதி, மதத்தைக் குறிப்பிட தேவையில்லை.. கேரளா அரசின் துணிச்சலான நடவடிக்கைக்கு கமல் பாராட்டு

ஜாதி, மதத்தைக் குறிப்பிட தேவையில்லை என்ற கேரளா அரசின் துணிச்சலான நடவடிக்கைக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

By Madhivanan
Google Oneindia Tamil News

சென்னை: பிறப்பு சான்றிதழில் ஜாதி, மதத்தைக் குறிப்பிடத் தேவையில்லை என்ற கேரளா அரசின் நடவடிக்கை துணிச்சலானது என நடிகர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிறப்பு சான்றிதழில் ஜாதி, மதம் ஆகியவற்றை குறிப்பிட தேவையில்லை என்பது அண்மையில் கேரளா அரசு அனுப்பிய சுற்றறிக்கை. இந்த சுற்றறிக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

kamal

இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு:

மீண்டும் கேரளா அரசினது துணிச்சலான நடவடிக்கை. உங்கள் சுற்றறிக்கை வரலாற்றுப்பூர்வமானது.

நான் என் மகள்களைப் பள்ளியில் சேர்க்கும்போது பிறப்புச் சான்றிதழில் ஜாதி மற்றும் மதத்தைக் குறிப்பிட மறுத்தேன். என் மகள்கள் 21 வயதைக் கடந்த பிறகு ஸ்ருதி ஹாசன் இந்து மதத்தைத் தேர்வு செய்தார். அக்‌ஷரா ஹாசன் ஜாதி, மதம் இல்லாமல் வாழ முடிவெடுக்கலாம்.

இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

English summary
Actor Kamal Haasan today's tweet 'Bravo again Kerala Govt. Your circular is historic. Iv'e refused filling caste and religeon columns in my daughter's birth certificate. My daughters decided after they were 21. Shruti has chosen to be Hindu. Akshara might stay without caste or religeon."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X