For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்ன ஸ்டைல் காட்டுறியா.. எனக்கு நீச்சல் கற்றுத் தந்ததே எம்ஜிஆர்தான்.. யாருக்கு சொல்கிறார் கமல்?

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: கையை இடுப்பில் வைத்துக்கொண்டு நிக்குறியா, என்ன ஸ்டைல் காட்டுறியா என கேட்ட இயக்குநர் பாலச்சந்தர்தான் எனது குரு. எனவேதான், எனது படங்களில் பிற கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வழக்கமாகிவிட்டது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

சுதந்திர தினத்தையொட்டி, தமிழ் டிவி சேனல் ஒன்றில் கமல்ஹாசன் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கேள்வி பதில், பிரபலங்களுடனான சந்திப்பு என வகையான நிகழ்வுகள் நடந்தன.

தேவர் மகன்

தேவர் மகன்

இதில் நடிகர் நாசர் பங்கேற்றபோது, நிகழ்ச்சி தொகுப்பாளர், இயக்குநர் கரு.பழனியப்பன், ஒரு கேள்வியை முன் வைத்தார். தேவர் மகன் திரைப்படம் உட்பட கமல்ஹாசனின் பல படங்களில், நாசர் கதாப்பாத்திரம் மிக வலுவாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. நாசருக்காக சிறப்பு கவனம் எடுத்து கதை வடிப்பீர்களா என்று கமலுக்கு, கேள்வி எழுப்பினார். இதற்கு, பதிலளித்த நாசர், கமல்ஹாசன் திரைப்படத்தில் கூட்டத்தில் ஒரு ஓரத்தில் நிற்பவர் கூட சிறப்பாக நடிப்பதை வெளிப்படுத்தும் வகையில் காட்சிகள் இருக்கும். அது கமல்ஹாசனின் கதை எழுதும் தன்மை என்றார்.

முட்டாள்தனம்

முட்டாள்தனம்

கமல்ஹாசன் இதற்கு பதிலளித்து பேசுகையில், இதற்கு காரணம், நாங்கள் வளர்ந்த விதம் அப்படி. தன்னம்பிக்கை இல்லாதவர்தான் பிறரது நடிப்புக்கு வாய்ப்பு அளிக்க மாட்டார்கள். தன்னம்பிக்கை இருப்பவர் சக நடிகரை ஊக்கப்படுத்த வேண்டியது அவசியம். பிற நடிகர் தனக்கு போட்டி என நினைப்பது பெரிய முட்டாள்தனம்.

ஸ்டைல் பண்றியா?

ஸ்டைல் பண்றியா?

இயக்குநர் பாலச்சந்தர் படங்களில் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் காட்சியோடு ஒத்து போக வேண்டியது அவசியம். ஒரு கதாப்பாத்திரம் பேசிக்கொண்டிருக்கும்போது அருகே நிற்கும் நான், கொஞ்சம் இடுப்பில் கை வைத்து நின்று கொண்டிருந்தால்கூட அவருக்கு பிடிக்காது. "என்ன ஸ்டைல் பண்றியா.. தனியா ஸ்கோர் பண்ண பார்க்குறியா.. என்படத்துல என்னை மிஞ்சி தனியாக பெயர் எடுக்க பார்க்குறியா" என்று பாலச்சந்தர் கேட்பார். இதனால்தான் கதாப்பாத்திரங்கள் எல்லோருக்கும் சம உரிமை அளிப்பது வழக்கம் என்றார்.

நீச்சல்

நீச்சல்

மேலும், நிகழ்ச்சியின் மற்றொரு சந்தர்ப்பத்தில், எம்ஜிஆர் ராமாவரம் தோட்டத்தில் எனக்கு நீச்சல் கற்று கொடுத்ததே எம்ஜிஆர்தான். அவரிடம் அரசியல் நீச்சலும் அப்போதே கற்றிருக்கலாம் என்று இப்போது நினைக்கிறேன் என்றார். இதன் மூலம், எம்ஜிஆர் தனக்குதான் நெருக்கமானவர் என்பதை கமல் கூறியதாக பார்க்கப்படுகிறது. ஸ்டைல் மூலமாக ரஜினிகாந்த் பிரபலமடைந்தவர். ஆனால், ஸ்டைல் காட்டுவது நல்ல நடிப்பல்ல என கூறியுள்ளார் கமல். மேலும் எம்ஜிஆர் தனக்கு நீச்சல் கற்றுத்தரும் அளவுக்கு நெருக்கமானவர் என கூறியுள்ளார் கமல். சமீப காலமாக எம்ஜிஆர் ஆதரவு வாக்காளர்களை குறி வைத்து ரஜினிகாந்த் காய் நகர்த்துவதாக தகவல்கள் வெளியானது நினைவிருக்கலாம்.

யாருக்கான மெசேஜ்?

யாருக்கான மெசேஜ்?

கையை இடுப்பில் வைத்துக்கொண்டு நிக்குறியா, என்ன ஸ்டைல் காட்டுறியா என கேட்ட இயக்குநர் பாலச்சந்தர்தான் எனது குரு. எனவேதான், எனது படங்களில் பிற கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வழக்கமாகிவிட்டது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். ஸ்டைல் மூலமாக ரஜினிகாந்த் பிரபலமடைந்தவர். ஆனால், ஸ்டைல் காட்டுவது நல்ல நடிப்பல்ல என கூறியுள்ளார் கமல். மேலும் எம்ஜிஆர் தனக்கு நீச்சல் கற்றுத்தரும் அளவுக்கு நெருக்கமானவர் என கூறியுள்ளார் கமல்.

English summary
Kamal Haasan indirectly slam Rajinikanth in a TV show? here you can find is it true or false.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X