For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கமல் பின்னால் ஒன்று திரண்ட ராமேஸ்வரம் மீனவர்கள்.. உற்சாக சந்திப்பு!

ராமேஸ்வரத்தில் மீனவர்களுடன் நடிகர் கமல்ஹாசன் கலந்துரையாடினார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அரசியல் வானில் எம்ஜிஆரைப் அழிக்க முடியாத சூரியனாக மாறுவாரா கமல் ?

    ராமேஸ்வரம்: மீனவர்களுடன் நடிகர் கமல்ஹாசன் கலந்துரையாடினார். அப்போது ஆட்சியாளர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டினார்.

    ராமேஸ்வரத்தில் இருந்து இன்று தனது அரசியல் பயணத்தை நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ளார். இன்று மாலை கட்சிப் பெயரையும் சின்னத்தையும் நடிகர் கமல் அறிவிக்க உள்ளார்.

    இந்நிலையில் ராமேஸ்வரம் கணேஷ் மகாலில் மீனவர்களை நடிகர் கமல்ஹாசன் சந்தித்தார். அப்போது எனது மீனவ நண்பர்களை சந்திக்க வந்துள்ளதாக கூறி தனது உரையை தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன்.

    மீன்பிடி தொழிலும் ஒன்று

    மீன்பிடி தொழிலும் ஒன்று

    அனைத்தும் சரியாக நடந்து கொண்டிருக்கிறது என்ற அவர், தமிழகத்தின் மிக முக்கிய தொழில்களில் மீன்பிடி தொழிலும் ஒன்று என்றார். மீனவர்கள் பாதுகாப்புடன் தொழில் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

    திசை திருப்புகிறார்கள்

    திசை திருப்புகிறார்கள்

    அரசுகள் வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு சென்றுவிட்டன என்றும் வாக்குறுதியை நிறைவேற்றாத போது கேள்விகேட்டால் திசைதிருப்புகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

    அரசின் கடமை

    அரசின் கடமை

    கேள்வி கேட்டால் தடியடி நடத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தடியடி நடத்தி பதில் சொல்ல முடியாது என்றும் அவர் கூறினார். கேள்வி கேட்டால் பணிவுடன் பதில் சொல்ல வேண்டியது அரசின் கடமை என்றார்.

    எங்களின் கடமை

    எங்களின் கடமை

    கடல் மேலாண்மை, சர்வதேச சட்டங்களை மதிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம் என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். மீனவர்களுக்கு செவிசாய்க்க வேண்டியது எங்களின் கடமை என்றும் கமல் கூறினார்.

    English summary
    Kamal haasan meets fisherman in Rameshwaram. Kamal has accused that govts not implementing thier promises.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X