For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'யாரையும் கலைக்க வரவில்லை' - திராவிட அரசியலுக்கு எதிரான ரஜினிக்கு கமல் பதிலடி?

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    கமலையும் அழைத்தேன்-ஸ்டாலின் பேட்டி- வீடியோ

    சென்னை: தாம் யாரையும் அசைக்கவோ கலைக்கவோ வரவில்லை; மக்கள் சேவைக்காக வந்திருக்கிறேன் என கமல்ஹாசன் கூறியிருப்பது திராவிட அரசியலை அகற்ற வேண்டும் என்கிற ரஜினிகாந்த் மற்றும் பாஜக வகையறாக்களுக்கான பதிலடியாக பார்க்கப்படுகிறது.

    கழகங்கள் இல்லாத தமிழகம் என்பது பாஜகவின் முழக்கம். அதேநேரத்தில் திராவிட அரசுகள் தமிழகத்தில் செயல்படுத்திய அத்தனை நலத்திட்டங்களையும் ஈயடிச்சான் காப்பியாக மத்திய பட்ஜெட்டில் இடம்பெற வைத்திருக்கிறது பாஜக.

    தமிழகத்தில் சிஸ்டம் கெட்டுப் போச்சு; ஆன்மீக அரசியலை முன்னெடுப்பேன் என்பது ரஜினிகாந்தின் பேச்சு. பாஜகவின் இன்னொரு முகமாக ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் பார்க்கப்படுகிறது.

    ரஜினியயை நிராகரித்த திமுக

    ரஜினியயை நிராகரித்த திமுக

    இதனால் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், கருணாநிதியை ரஜினிகாந்த் சந்தித்த அப்போதே, ஆன்மீக அரசியலை விளாசியிருந்தார். ஆனால் நடிகர் கமல்ஹாசனோ தமது நிறம் கருப்புதான் என திராவிடத்தை முன்வைத்தே பேசிவருகிறார்.

    திராவிடமே கொள்கை

    திராவிடமே கொள்கை

    அத்துடன் தமது கொள்கையில் திராவிடம் இருக்கும்; ரஜினியின் நிறம் காவியாக மாறிவிடக் கூடாது என்றெல்லாம் திராவிட அரசியலின் இன்னொரு குரலாக பேசி வருகிறார். இந்நிலையில்தான் சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை கமல்ஹாசன் சந்தித்தார்.

    சேவைக்காக வந்துள்ளேன்

    சேவைக்காக வந்துள்ளேன்

    இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், தாம் யாரையும் அசைக்க, கலைக்கவரவில்லை என்றார். அதாவது திராவிட அரசியலை அகற்ற தாம் வரவில்லை என்பதைத்தான் கமல் அப்படி கூறியதாக பார்க்கப்படுகிறது. மேலும் தமது கொள்கையில் திராவிடம் இருக்கும் என்றும் பகிரங்கமாக கமல் கூறியிருக்கிறார்.

    திராவிட அரசியலை எதிர்ப்போருக்கு பதிலடி

    திராவிட அரசியலை எதிர்ப்போருக்கு பதிலடி

    கமல்ஹாசனின் இந்த கருத்துகள், திராவிட அரசியலை அகற்ற துடிக்கும் ரஜினிகாந்த் வகையறாக்களுக்கான பதிலடியாகவே பார்க்கப்படுகிறது. கமல்ஹாசனின் எதிர்கால பாதை பாஜக, ரஜினிக்கு எதிரானதாகவே இருக்கும் என்பதையே அவரது இந்த கருத்து வெளிப்படுத்துகிறது.

    English summary
    Actor Kamal Haasan said that he supported the Dravidian ideology.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X