For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேள்வி கேட்டா பதில் சொல்லுங்கள்... அதென்ன தாக்குறது.. எகிறிய கமல்

Google Oneindia Tamil News

Recommended Video

    விமான நிலையத்தில் கமல் அளித்த பேட்டி

    சென்னை: அரசியல்வாதிகளிடம் மக்கள் கேள்வி கேட்பது அவர்களின்ஜனநாயக உரிமை என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

    சென்னை சைதாப்பேட்டையில் நடந்த விநாயகர் சதுர்த்தி தெருக்கூத்து நிகழ்ச்சியின் போது தமிழிசையிடம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி கேட்ட ஆட்டோ டிரைவர் கதிர் தாக்கப்பட்டார். தமிழிசையும் நமட்டு சிரிப்பு சிரித்தார்.

    ஜனநாயக உரிமை

    ஜனநாயக உரிமை

    இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து தமிழிசை அந்த ஆட்டோ டிரைவரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். இந்நிலையில் இதுகுறித்து கமல்ஹாசன் கூறுகையில், அரசியல்வாதிகளிடம் மக்கள் கேள்வி கேட்பது அவர்களின் ஜனநாயக உரிமை.

    நாளை மக்களுடன் சந்திப்பு

    நாளை மக்களுடன் சந்திப்பு

    கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டும், அதற்காக தாக்குவது அரசியல் மாண்பு அல்ல என்றார் அவர். இதனிடையே வரும் 20-ஆம் தேதி திருப்பூரில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மக்களை சந்திக்கிறார்.

    பல்வேறு பிரச்சினைகள்

    பல்வேறு பிரச்சினைகள்

    இதையொட்டி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினர்கள் வீடு வீடாக சென்று மக்களுக்கு வெற்றிலை பாக்கு வழங்கி அழைப்பு விடுத்து வருகின்றனர். திருப்பூரில் மக்களை சந்தித்து பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச உள்ளார்.

    பொதுமக்கள் ஆச்சரியம்

    பொதுமக்கள் ஆச்சரியம்

    ஒரு அரசியல் கட்சி வீட்டுக்கு வந்து அதுவும் பொது கூட்டத்துக்கு வெற்றிலை பாக்கு வழங்கி அழைப்பு விடுத்ததை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். மதுரை, திருச்சி, சென்னை, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் பொதுக் கூட்டங்களை நடத்தியுள்ளது மக்கள் நீதி மய்யம் கட்சி.

    English summary
    Kamal haasan says that asking questions to politician is their rights. They should answer.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X