For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவை அலங்கார வளைவால் இளைஞர் பலி- புகழ், பதவி முக்கியம் என நினைக்கும் அரசு கவிழும்: கமல் சாபம்

புகழும் பதவியும் மட்டுமே முக்கியம் என இருந்தால் தமிழக அரசு கவிழும் என நடிகர் கமல்ஹாசன் சாபமிட்டுள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: கோவையில் அலங்கார வளைவால் இளைஞர் பலியான சம்பவத்தை முன்வைத்து புகழும் பதவியும் மட்டும் முக்கியம் என நினைக்கும் அரசு கவிழும் என நடிகர் கமல்ஹாசன் சாபமிட்டுள்ளார்.

கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த அலங்கார வளைவில் மோதில் ரகு என்கிற இளைஞர் உயிரிழந்தார்.

Kamal Haasan slams TN Govt ob biker died in Coimbatore

இச்சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

உயிர்ச்சேதமானாலும் பரவாயில்லை. புகழும் பதவியும் மட்டுமே முக்கியம் என நினைக்கும் எவ்வரசும் கவிழும்.

பாதசாரிகளின் உயிரை மதியாத அரசு பல்லக்கில் போவது வெகுநாள் நடக்காது. விபத்துகள் நிகழ வழி செய்பவர் கொலைக்கு உடந்தையாவர் என தமிழக Banner"ஜி"க்கள் உணரவேண்டும்

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

English summary
Actor Kamal Haasan slammed that the TamilNadu govt on the biker died by AIADMK hoarding in Coimbatore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X