For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2015-ஆம் ஆண்டு வெள்ள நிவாரண பொருள்களில் ஸ்டிக்கர் ஒட்டியது பிச்சையைவிட கேவலம்- நெருப்பை கக்கிய கமல்

2015-ஆம் ஆண்டு சென்னையில் வந்த பெரு வெள்ளத்தின்போது ரசிகர்கள் அளித்த நிவாரண பொருள்களில் ஸ்டிக்கர் ஒட்டியது பிச்சை எடுப்பதை விட கேவலமான செயல் என்று நடிகர் கமல்ஹாசன் கடுமையாக சாடினார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னையில் பெரு வெள்ளத்தின் போது மற்றவர்கள் நிவாரணமாக கொடுத்த பொருள்களில் ஸ்டிக்கர் ஒட்டியது மிகவும் கேவலமான ஒன்று என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

சென்னையில் கடந்த 2015-ஆம் ஆண்டு பெரு வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளப் பெருக்கால் சென்னையே தத்தளித்தது. இந்த கடும் பாதிப்பை சரி கட்ட பல்வேறு தரப்பிலிருந்து நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன.

Kamal hasan slams ADMK government

தமிழக அரசு தாங்கள் வழங்கிய நிவாரண பொருள்களில் ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. மேலும் பிறர் கொண்டு வரும் நிவாரண பொருள்களை ஆட்சியாளர்கள் பறித்து அதில் ஸ்டிக்கர் ஒட்டுவதாக பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டின.

இந்நிலையில் இந்த செயலுக்கு நடிகர் கமல்ஹாசன் தற்போது கண்டனம் தெரிவித்துள்ளார். கேளம்பாக்கத்தில் இன்று ரசிகர்களுடன் சந்திப்பு கூட்டம் நடத்தினார்.

அப்போது அவர் கூறுகையில் 2015-ஆம் ஆண்டு வெள்ளத்தின்போது ரசிகர்கள் அளித்த நிவாரணத்தை ஆட்சியாளர்கள் பறித்து விட்டனர். மற்றவர்கள் கொடுத்த நிவாரணத்தில் ஸ்டிக்கர் ஒட்டியது பிச்சையை விட கேவலம் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

English summary
Actor Kamal hassan strongly condemns ADMK government and also he compares the ruling party's activities in 2015 Chennai flood with begging.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X