For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென்னிந்திய மேப், 6 மாநிலங்கள்... இவற்றை உள்ளடக்கியதே கமலின் கொடி!

கமலின் கட்சியில் உள்ள கொடியின் நிறத்தில் உள்ளது எதை குறிக்கிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    கமலின் கட்சி கொடியின் ரகசியம் இதுதான்!

    மதுரை: கமலின் கட்சியின் கொடியில் உள்ள வெள்ளை மற்றும் சிவப்பு நிறம் எதை உணர்த்துகிறது என்று பல்வேறு யூகங்கள் நிலவி வருகின்றன. தற்போது கமல் அதன் அர்த்தத்தை விளக்கியுள்ளார்.

    கமல்ஹாசன் ஆரம்பத்திலிருந்தே தான் கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்த போதிலிருந்தே அவர் இடதுசாரி தலைவர்களை சந்தித்து வந்தார்.

    Kamal hassan explains his party's flag

    இதனால் அவரது முகம் கம்யூனிஸமாக இருக்கலாம் என்ற பேச்சு நிலவியது. எனினும் அவர் திராவிடக் கட்சியைச் சேர்ந்த கருணாநிதியையும் சந்தித்தார். இதனால் அந்த யூகத்தில் குழப்பம் நிலவியது.

    இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள கட்சியின் கொடியில் 3 ஜோடி சிவப்பு கைகளும், 3 ஜோடி வெள்ளை கைகளும் நடுவே கருப்பு வளையத்தில் வெள்ளை கைகளும் ஜோடியாக உள்ளன.

    இதை பார்க்கும் சிவப்பு நிறம் என்பது தொழிலாளர்கள் வர்க்கத்தினரும், வெள்ளை நிறம் என்பது முதலாளித்துவத்தையும் குறிக்கிறது. இந்த இருவரும் இணைந்து சமமாக செயல்பட வேண்டும் என்பதையே இந்த கொடி குறிப்பதாக இருந்ததாக பல்வேறு யூகங்கள் இருந்தன.

    இந்த நிகழ்ச்சியின் போது கமல் தனது கட்சியின் சின்னம் குறித்து பேசுகையில், இடது சாரியும் இல்லை வலது சாரியும் இல்லை. அதுதான் நடுவில் மய்யம் என கட்சியின் பெயரில் வைத்துள்ளேன்.

    கொடியை உற்றுப்பார்த்தால் தென்னிந்தியா மேப் தெரியும். 6 கைகள் 6 மாநிலங்களை குறிக்கும். 6 முனை நட்சத்திரம் மக்களைக் குறிக்கும். மக்களின் நீதியை மய்யமாக தோன்றிய கட்சி இது என்றார் கமல்ஹாசன்.

    English summary
    Kamal hassan's party's flag ensures the workers and owning people are the same.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X