For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஸ்வரூபம் பிரச்சனையில் ஜெயலலிதா காலில் விழ வலியுறுத்தினர்... கமல்ஹாசன் திடுக் தகவல்

விஸ்வரூபம் பிரச்சினை தன்னை ஜெயலலிதா காலில் விழ சிலர் வலியுறுத்தியதாக நடிகர் கமல்ஹாசன் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: விஸ்வரூப்ம் படத்துக்கு தடை கோரி தமிழக அரசு தொடுத்த வழக்கு விவகாரத்தில் தன்னை ஜெயலலிதாவின் காலில் விழ வேண்டும் என்று சிலர் வலியுறுத்தியதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

தந்தி தொலைக்காட்சி நடிகர் கமல்ஹாசன் அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது: கமல்ஹாசன் எப்போது புரட்சியாளராக எப்போது மாறவில்லை என்று சொல்கிறீர்கள்? சினிமாவில் பெரும் புரட்சியாளர் என்கிறார்கள், அதுவே போதுமானது.

அதைக்கூட செய்யாதவர்கள் இருக்கிறார்களே, அந்தவகையில் இது புரட்சிதானே? சினிமா தான் உயிர்மூச்சு என்று சொல்பவனை, நீ நடிச்சுடுடா பார்க்கலாம், இனி இந்த தொழிலில் நீ இருக்க முடியுமா என்று சவால் விடுகிறார்கள் என்றால் அது அவனுக்கு மரணம் போல தானே?

விஸ்வரூபம் எடுத்தேன்

விஸ்வரூபம் எடுத்தேன்

பாரதியார் பேனாவை பிடுங்கி, இனிமேல் நீ எழுதக்கூடாது என்று கூறினால், அவர் வாயால் முணுமுணுத்துக்கொண்டு இருப்பார். அதனை தாண்டியும் நான் விஸ்வரூபம் எடுத்தேன். அது புரட்சி இல்லையா?

நக்ஸலைட்டுகளுடன் சண்டை

நக்ஸலைட்டுகளுடன் சண்டை

காட்டுக்குள் சென்று நக்சலைட்டுகளுடன் சென்று சண்டை போடுவது தான் புரட்சி என்பீர்களா? தமிழக அரசு, ராஜ்கமல் எனும் சிறிய கம்பெனியுடன் மோதியது. பெரிய பணக்காரன் ஒருத்தன் அழுந்த தும்மினால் காணாமல் போய்விடும். என் பலமும், பலவீனமும், எனது அளவும் என்னவென்று எனக்கு தெரியும்.

தொடர் சிக்கல்

தொடர் சிக்கல்

இருந்தாலும் 15 வருடங்களாக எனக்கு தொடர்ந்து சிக்கல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஒரு கலைஞனை மட்டுமே நம்பி நடக்கின்ற கம்பெனி தான் ராஜ்கமல். அதனால் தான் பணிந்து பணிந்து சென்றுகொண்டே இருந்தேன். ஆனாலும் துரத்தி துரத்தி தாக்கப்பட்டேன். ஆனாலும் அமைதியாக இருந்தேன்.

பண விளையாட்டு

பண விளையாட்டு

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு பிறகு இந்த கருப்பு பண விளையாட்டில் நாம் சம்பந்தப்பட்டுவிட கூடாது என்ற கருத்தை நான் எனக்குள் எடுத்துக்கொண்டேன். எப்படி இறைமறுப்பை நான் எடுத்தேனோ, அதுபோல. நான் யாரையும் இடைஞ்சல் செய்யவில்லை. என் அளவில் கருப்பு பணம் நான் வாங்கமாட்டேன். அது என்துறையில் மட்டும் அல்ல, என் வாழ்வில் நான் செய்த புரட்சி.

ஜெயலலிதாவிடம் உதவி

ஜெயலலிதாவிடம் உதவி

ஜெயலலிதா இருந்தபோது கூட அடி பலமாக விழவில்லை. எனது மும்பை எக்ஸ்பிரஸ், சண்டியர் படங்களின் பெயர் மாற்றுதலுக்கான உந்தல் எங்கிருந்து வந்தது என்பது கூட புரியவில்லை. நான் அவரிடம் தான் உதவியை எதிர்பார்த்து இருந்தேன். ஆனால் அங்கிருந்து தான் வந்தது பிரச்சினை.

சாமானிய காரியமா?

சாமானிய காரியமா?

ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்திலும் நான் அமைதியாகவே இருந்ததில்லை என்பது தான் என் வாதம். தமிழக அரசை எதிர்த்து வழக்கு போடுவது என்பது சாமானியமான காரியமா? ஆனால் அதில் கிடைத்த வெற்றி, எனக்கு நீதி-நியாயத்தின் மேல் நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால் மறுநாளே மறுபடியும் என் படத்துக்கு தடை போடப்பட்டது.

மூத்தோர் காலில் விழுந்துள்ளேன்

மூத்தோர் காலில் விழுந்துள்ளேன்

அப்போது என்னை அவர் காலில் விழ திரைத்துறையினர் வலியுறுத்தினர். காலில் விழுவது பெரிய விஷயம் அல்ல. எம்.ஜி.ஆர்., சிவாஜி, எனக்கு மூத்தோர் காலிலும் விழுந்திருக்கிறேன். ஆனால் நியாயத்துக்கு நேர் மாறாய் எனக்கும், என் தொழிலுக்கும் துரோகம் செய்திருந்தால் பெற்றவளே ஆனாலும் வணங்கமாட்டேன், என்ன நஷ்டம் வந்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் என்றேன். இதனை அவமரியாதை ஏற்படுத்தவேண்டும் என்ற கோணத்தில் சொல்லவில்லை.

நாட்டை விட்டு போவேன்

நாட்டை விட்டு போவேன்

நாட்டை விட்டு போவேன் என்பதை எனக்கு கிடைத்த அவமானத்தில் சொல்லிவிட்டேன் என்கிறார்களே, நான் வாழும் நாட்டை விட்டு தானே போவேன் என்று கூறினேன். அதை கூட புரிந்துகொள்ள வேண்டாமா? கம்பனுக்கு மரியாதை கிடைக்காததால் அரங்கேற்றத்துக்காக சோழ நாட்டில் இருந்து, சேர நாட்டுக்கு சென்றார். அப்படி ஒரு கோபம் தான் எனக்கு.

துரத்தி... துரத்தி...

துரத்தி... துரத்தி...

துரத்தி துரத்தி அடிக்கிறார்கள். விஸ்வரூபம் பட பிரச்சினையின் போது குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக கூறினார்கள். அதை உண்மையிலேயே இஸ்லாமியர்கள் வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? இது திட்டமிடப்பட்ட நிகழ்வு என்று நான் கூறினால், உடனே என்னை கைது செய்யவேண்டும் என்பார்கள். நான் சந்தேகப்படத்தான் முடியும். இது அரசாங்கமே செய்ததா? என்று கேட்டால், எனக்கு தெரியாது. யாரை குற்றம் செய்தவர்கள் என்று குறிப்பிட்டு பேசுகிறார்களோ, அவர்கள் என்னிடமே முறையிட்டு இருக்கிறார்கள். எனவே எனக்கு அழுத்தமான சந்தேகம் உண்டு. இல்லையென்றால் எனக்கு இப்படி கோபம் வரவேண்டிய அவசியமே இல்லையே...ஜெயலலிதாவுக்கும், கமல்ஹாசனுக்கும் இடையே தனிப்பட்ட பகை சத்தியமாக இல்லை.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

English summary
Actor Kamal Hassan says in an interview that he was forced to touch the feet of Jayalalitha. But i refused to do. I legally faced the problem in the court and got victory.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X