அழிவு வரும் வரை காத்திருக்க வேண்டியது இல்லை- கமல் நெத்தியடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எப்போதும் அழிவு வரும் வரை காத்திருக்க வேண்டியது இல்லை. 37 ஆண்டுகளாக நான் இயங்கி வந்தும் அந்த உழைப்பு வீணாகிவிட்டது என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களாக மக்களுக்கு ஆதரவாகவும், ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் நடிகர் கமல் குரல் கொடுத்து வருகிறார். எண்ணூர் கழிமுகத்துவாரம், விவசாயிகளுடன் சந்திப்பு என மக்கள் களப்பணிகளில் ஈடுபட தொடங்கிவிட்டார்.

இந்நிலையில் நடிகர் கமல் வரும் 7-ஆம் தேதி முக்கிய விஷயத்தை அறிவிக்க போவதாக தெரிவித்துள்ளது. அதுகுறித்து ஆலோசனை நடத்த இன்று கேளம்பாக்கத்தில் ரசிகர்களை சந்தித்தார்.

37 ஆண்டுகளாக இயங்குகிறேன்

37 ஆண்டுகளாக இயங்குகிறேன்

இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். அப்போது அவர் ரசிகர்கள் முன்பு பேசுகையில், 37 ஆண்டுகளாக நான் இயங்கி வருகிறேன். வள்ளல்கள் கூட்டத்தை உருவாக்க முயன்று வருகிறேன்.

மழையால் கடும் பாதிப்பு

மழையால் கடும் பாதிப்பு

கூலிவேலை, சிறு வியாபாரம் செய்வோர் நன்கொடை தருகின்றனர். ஆர்வக்கோளாறில் பதவிக்காக வந்துவிட்டதாக நினைக்காதீர்கள். ஏழைகளும் பணக்காரர்களும் கடந்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஏழைகளுக்கும் அதே நிலை தான், பணக்காரர்களுக்கும் அதே நிலைதான்.

கொற்கையில் சுனாமி வந்ததால்

கொற்கையில் சுனாமி வந்ததால்

கொற்கையில் சுனாமி வந்ததால் பாண்டியர் தலைநகர் மதுரைக்கு போனது. வரலாற்றை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும். எப்போதும் அழிவு வரும்வரை காத்திருக்க வேண்டியது இல்லை. 35 ஆண்டுகால உழைப்பு காணாமல் போய்விட்டதாக கருதுகிறேன்.

தவறி விட்டேன்

தவறி விட்டேன்

37 ஆண்டுகளாக ரசிகர்களின் உற்சாகத்தை மடைமாற்றம் செய்ய தவறிவிட்டேன். நற்பணியில் தீவிரவாதிகள் எமது ரசிகர்கள். திருட்டுத்தனம் செய்பவர்கள் பெரியவர்கள் பேல் நடப்பதை தாங்க முடியவில்லை.

உ.பி. இந்துக்களுக்குப் பயப்பட மாட்டேன்

உ.பி. இந்துக்களுக்குப் பயப்பட மாட்டேன்

அடிக்கடி தட்டி பார்க்க நான் ஒன்றும் மிருதங்கம் அல்ல. அகிம்சையை ஒரு தீவிரநிலைக்கு கொண்டு சென்றவர் காந்தி. எப்போதும் நான் பயப்படுவது இயக்கத்தில் உள்ள இந்துக்களுக்குத்தான். எங்கோ உத்தரப்பிரதேசத்தில் உள்ள இந்துகளுக்கு அல்ல என்றார் அவர் கமல்ஹாசன்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Kamal hassan says that we should not wait till devastation occurs. We have to look out the History.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற