For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பினராயி விஜயன், கெஜ்ரிவாலை தொடர்ந்து மம்தா பானர்ஜியை சந்திக்கிறார் கமல்ஹாசன்

கேரளா முதல்வர், டெல்லி முதல்வரைத் தொடர்ந்து விரைவில் மேற்கு வங்க மாநில முதல்வரை சந்திக்கப் போகிறார் நடிகர் கமல்ஹாசன்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    மம்தா பானர்ஜியை சந்திக்கிறார் கமல்ஹாசன்-வீடியோ

    சென்னை: பினராயி விஜயன், கெஜ்ரிவாலை தொடர்ந்து மம்தா பானர்ஜியை சந்திக்கப் போகிறார் நடிகர் கமல்ஹாசன்
    இதற்கான நேரம் கேட்டுள்ளார் கமல். இருவரின் சந்திப்பு விரைவில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழகத்தின் அனைத்துத்துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது என்று கொளுத்திப்போட்ட கமல்ஹாசனை அரசியல்வாதிகள் விமர்சிக்கவே, தற்போது முதல்வர் அறிவிப்புவரை கொண்டு சென்றுள்ளது.

    அரசுக்கு எதிராகத் தொடர்ந்து கமல்ஹாசன் கருத்துகளைத் தெரிவித்து வந்தார். அமைச்சர்களின் ஊழல் புகார்களை அவர்களுக்கே அனுப்புங்கள் என்று அமைச்சர்களின் முகவரியையும் பதிவிட்டிருந்தார். ஆனால், அந்த முகவரியில் முதல்வர் உள்பட அமைச்சர்களின் விவரம் எதுவுமே இல்லாததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    கேரளா முதல்வருடன் சந்திப்பு

    கேரளா முதல்வருடன் சந்திப்பு

    கோவை திருமண விழாவில் பேசிய கமல், தான் அரசியலுக்கு வந்துவிட்டதாக தெரிவித்திருந்தார். கமலின் அரசியல் பேச்சுகள் அதிகரித்துவந்த நிலையில், கடந்த 1ஆம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்தார் கமல்.

    அரசியல் பாடம்

    அரசியல் பாடம்

    செய்தியாளர்களிடம் பேசிய கமல், பினராயி விஜயனிடம் அரசியல் கற்றுக்கொள்ள வந்ததாகத் தெரிவித்தார்.

    தான் அரசியல் கட்சி தொடங்கும் யோசனையில் இருப்பதாக ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு அதிரடியாக பேட்டி கொடுத்தார்.

    ரஜினியுடன் கூட்டணி

    ரஜினியுடன் கூட்டணி

    சென்னையில் நடந்த விழாவில் பேசிய கமல் அரசியல் கட்சி தொடங்குவது குறித்தும் ரஜினி உடனான கூட்டணி பற்றியும் பேசினார். இதற்கு ரஜினி ரசிகர்களும், ரஜினியை அரசிலுக்கு அழைப்பவர்களும் விமர்சனம் செய்தனர்.

    கெஜ்ரிவால் வருகை

    கெஜ்ரிவால் வருகை

    டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வியாழக்கிழமையன்று கமல்ஹாசன் இல்லத்தைத் தேடி வந்து ஆலோசனை செய்துள்ளார். அவர் கமல் அரசியலுக்கு வர வேண்டும் என்று தெரிவித்துவிட்டு சென்றுள்ளார்.

    ஊழலுக்கு எதிரானவர்கள்

    ஊழலுக்கு எதிரானவர்கள்

    ஊழலுக்கு எதிரானவர்கள் தன்னுடைய உறவினர்கள் என்று கூறினார் கமல். 100 நாள்களில் தேர்தல் வந்தால் அரசியலில் ஈடுபடுவதற்கு தயாராக உள்ளதாகவும், முதல்வராக விரும்புவதாகவும் கூறினார்.

    மம்தா பானர்ஜி

    மம்தா பானர்ஜி

    இந்த நிலையில், பினராயி விஜயன், அரவிந்த் கெஜ்ரிவாலைத் தொடர்ந்து மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை சந்திக்கப் போவதாக கூறியுள்ளார்.

    விரைவில் சந்திப்பு

    விரைவில் சந்திப்பு

    கமல்ஹாசன் தரப்பிலிருந்து, மம்தாவைச் சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. மம்தாவும் கமல்ஹாசனைச் சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளதாகவும் இதனால் மம்தா பானர்ஜி - கமல்ஹாசன் சந்திப்பு விரைவில் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    மனிதநேயவாதி

    மனிதநேயவாதி

    நான் இடதுசாரியுமல்ல, வலதுசாரியுமல்ல,மனிதநேயவாதி என்று கூறியிருந்தார் கமல், ஊழலுக்கு எதிரானவர்கள் தனது உறவினர்கள் என்று கூறியிருந்த கமல், தற்போது பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அரசியல் தலைவர்களை நாடி பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Sources said that Kamal Haasan wanted to meet Mamatha Banarji.Kamal Haasan's plans to enter politics and the impact such a move would have on the political scenario in Tamil Nadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X