For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கமலும், ரஜினியும் அரசியலுக்கு தகுதியே இல்லாதவர்கள்.. ட்ராபிக் ராமசாமி பொளேர்!

நடிகர்கள் கமல், ரஜினி இருவரும் தமிழக அரசியல் களத்திற்கு வருவதற்கு தகுதியற்றவர்கள் என்று ட்ராபிக் ராமசாமி கூறி உள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

கும்பகோணம் : அரசியலுக்கு வர நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த் இருவருக்கும் எந்த தகுதியும் இல்லை என்று சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி தெரிவித்து உள்ளார்.

சமூக ஆர்வலரும், மக்கள் பாதுகாப்பு கழகத்தின் தலைவருமான ட்ராபிக் ராமசாமி கும்பகோணத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது கமல், ரஜினி இருவரின் அரசியல் குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

Kamal and Rajini both are not fit for TN Politics

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 14ம் தேதிக்குள் ஜனாதிபதி ஆட்சி வரும். தமிழக சட்டசபை சபாநாயகராக உள்ள தனபால், அப்பதவிக்கு தகுதியே இல்லாதவர். டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தது செல்லாது. அவசர கோலத்தில், என்ன செய்வதென்றே தெரியாமல் சபாநாயகர் அவ்வாறு செய்து இருக்கிறார்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.டி.வி. தினகரன், தன்னம்பிக்கையும், தைரியமும் உள்ளவர். அவர் விரைவில் அ.தி.மு.க.,வை கைப்பற்றி வழி நடத்துவார். அதற்கான அத்தனை முயற்சிகளையும் அவர் எடுத்துவருவது தெரிகிறது.

தேர்தலில் கட்சிகளுக்கு சின்னம் கொடுக்கும் முறையை மாற்ற வேண்டும். அதற்கு பதில் நம்பர் முறையை கொண்டு வரலாம். சின்னத்தை மனதில் பதியவைத்து மக்கள் ஓட்டு போடுகிறார்கள். இதனாலே நல்லவர்களும், தகுதியானவர்களும் அரசியலுக்கு வரமுடிவதில்லை.

நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் இரண்டு பேருமே தமிழக அரசியலுக்கு தகுதியற்றவர்கள். அவர்கள் வெற்று விளம்பர பிரியர்கள். நடிகர்களால் மக்களை ஈர்க்க முடியுமே தவிர அதை ஓட்டாக மாற்ற முடியாது. தமிழக மக்கள் அவ்வளவு எளிதில் இனி ஏமாறமாட்டார்கள் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

English summary
Kamal and Rajini both are not fit for TN Politics says Traffic Ramaswamy. He also added that Soon TTV Dhinakaran will capture and lead ADMK party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X