For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி பிரச்சனை- வல்லுநர்களுடனான ஆலோசனை வீடியோவை ஒளிபரப்பினார் கமல்

காவிரி பிரச்சனைக்கு தீர்வு கேட்டு வல்லுநர்களுடன் கமல் நடத்திய உரையாடல் வீடியோ திருச்சி மக்கள் நீதி மய்ய பொதுக்கூட்டத்தில் ஒளிபரப்பப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

திருச்சி: காவிரி பிரச்சனைக்கு தீர்வு கேட்டு வல்லுநர்களுடன் கமல் நடத்திய உரையாடல் வீடியோ திருச்சி மக்கள் நீதி மய்ய பொதுக்கூட்டத்தில் ஒளிபரப்பப்பட்டு இருக்கிறது.

திருச்சியில் உள்ள ஜி.கார்னர் மைதானத்தில் மக்கள் நீதி மய்ய பொதுக்கூட்டம் நடந்து வருகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசி வருகிறார். அதில் காவிரி பிரச்சனைக்கு தீர்வு கேட்டு வல்லுநர்களுடன் கமல் உரையாடிய வீடியோ வெளியிடப்பட்டது.

Kamals discussion with Water management Experts video telecasted in Trichy meet

கமல் வல்லுனர்களிடம் கேள்வி கேட்டு காவிரி பிரச்சனை குறித்து விளக்கம் பெற்றார். அதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு ஏமாற்றிவிட்டது என்று வல்லுநர்கள் கூறினார்கள்.

தமிழக விவசாயிகள் அதிக அளவில் நிலத்தடி நீரை நம்பி இருக்கிறார்கள், ஆனால் நம்முடைய விவசாயம் ஆற்று நீர், ஏரி நீர் விவசாயம்தான். இதற்காக தமிழகத்திற்கு காவிரி நீரை கண்டிப்பாக கொடுக்க வேண்டும்'' என்று கூறினார்கள்.

மேலும் ''காவிரி பிரச்சனை டெல்டா பிரச்சனை இல்லை. அது தமிழகம் மொத்தத்திற்குமான பிரச்சனை. இது விவசாயிகள் பிரச்சனை இல்லை. மக்கள் பிரச்சனை'' என்று குறிப்பிட்டார்கள்.

இந்த அறிஞர்கள் கூற்றுப்படி நடந்தால் தமிழக நீராதார பிரச்சனை தீரும். ஆனால் தமிழக அரசு இதை எதையும் இதுவரை செய்யவில்லை. அவர்கள் பேச்சை இவ்வளவு நாள் கேட்காத காரணத்தால் இப்போது தண்ணீர் பிரச்சனை இருக்கிறது'' என்று கமல் குறிப்பிட்டு இருக்கிறார்.

English summary
Kamal's Makkal Needhi Maiyam Party meet held in Trichy. Kamal speaks about Cauvery issue in this meet. He says that he will become CM of Tamilnadu. Kamal's discussion with Water management Experts video telecasted in Trichy meet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X