For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கமலின் மநீம கட்சிக்கொடி சுட்டதாமே?... இந்தா கிளம்பிட்டாங்கல்ல!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடி பல இடங்களில் இருந்து காப்பியடித்தது என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    மதுரையில் கட்சி பெயரை அறிவித்தார் கமல்ஹாசன் | Oneindia Tamil

    சென்னை: கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியின் சின்னத்தின் வடிவம் காப்பியடிக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கியுள்ள கமல்ஹாசன், கொடியில் உள்ள ஆறு கைகள், ஆறு தென்மாநிலங்களைக் குறிக்கும் என விளக்கமளித்துள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் சின்னம் அறிமுகம் செய்த போது அதில் தாமரை, பாம்பு இடம் பெற்றிருந்தது. இதற்கு பலரும் கருத்து கூறினர். எங்கிருந்து காப்பியடித்தது என்று ஆதாரப்பூர்வமாக பதிவிட்டனர். இதனையடுத்து தாமரை, பாம்பு போன்றவைகளை நீக்கிவிட்டு இப்போது பாபா சின்னம் மட்டுமே உள்ளது. இப்போது கமலின் கட்சி, கொடி சின்னத்தையும் காப்பி என்று பதிவிட்டு வருகின்றனர்.

    மும்பை தமிழர் பாசறை

    மும்பை தமிழர் பாசறையின் கொடியில் இருந்து மநீம கட்சிக்கொடி சுட்டது என்றும் கட்சி பெயரை எந்த படத்தில் இருந்து சுட்டார் என்று தெரியலையே என்றும் கேட்டுள்ளார் ஒருவர்.

    சங்கத்தோட லோகோ

    National Federation of Postal Employees சங்கத்தோட லோகோன்னு நாளைக்கு யாராவது பிராதுன்னு வந்தீங்க.... அவ்வளவுதான் சொல்லிட்டேன். பாருங்க சார். காப்பியடிச்சி ஒரு கட்சி ஆரம்பிக்க விடுறாங்களா என்று கேட்கிறார் ஒருவர்.

    காம்பினேசன் எப்படி?

    அதிமுக,திமுக கட்சி கலரு,தேசிய கொடி கலரு,நடுவால சேகுவாரோ நட்சத்திர குறியீடு. திராவிடம் + ஹிந்துத்துவா + கம்யூனிஸ்ட். தட் பொங்கலுக்கு வடகறி காம்பினேஷன் தான் கமல் கட்சியோட கொடி குறியீடு என்று கூறியுள்ளார் ஒரு வலைஞர்.

    2 நாளில் தெரியும்

    கமல் கட்சி கொடி அவரே உருவாக்கினதா இல்ல யாருடையாவது ஆட்டையப்போட்டாரானு இன்னு இரண்டு மூன்று நாட்களில் தெரிய வரும்ன்னு சொல்றிங்களே.எப்படி சொல்றீங்க...? .எவனாவது இன்னும் இரண்டு நாட்களில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வான் பாரு என்று கேட்டுள்ளார் ஒருவர்.

    English summary
    Kamal Haasan on Wednesday launched his political party – Makkal Needhi Maiam, The party flag was hoisted at the beginning of the event. The flag of Haasan's party is imprinted on a white flag with hands holding one another by the wrists which forms a circle and in the middle of the circle, a star can be seen.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X