For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூத்துக்குடி: யார் இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு அனுமதி அளித்தது? கமல் சரமாரி கேள்வி

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: யார் இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு அனுமதி அளித்தது? கமல் சரமாரி கேள்வி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதி கொடுத்தது யார்? என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதி கொடுத்தது யார்? என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Kamal shoot outs many questions on the fire incident

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இதனை தடுக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த விசில் செயலியில் ஏராளமான கேள்விகளும் புகார்களும் வந்துள்ளன. பதில் தருமா அரசு என கேட்டு கேள்விகளை பட்டியலிட்டுள்ளார். அவை..

  • யார் இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு அனுமதி அளித்தது?
  • துப்பாக்கிச் சூட்டிற்கு அனுமதியளிக்கப்பட்ட இடங்களின் தக்க விவரங்கள் என்னென்ன?
  • துப்பாக்கிச்சூட்டிற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களின் விவரங்களும் குண்டுகளின் விவரங்களும் இன்னும் ஏன் அளிக்கப்படவில்லை?
  • இறுதியாகத் துப்பாக்கிச் சூடு நடைபெறுவதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களின் விவரங்கள் ஏன் இன்னும் தெரியப்படுத்தவில்லை?
  • துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் விவரங்களும் காயமடைந்தவர்களின் விவரங்களும் ஏன் அளிக்கப்படவில்லை?
  • இரண்டாம் நாளில் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடங்கள் குறித்து முழுவிவரம் இன்னும் தெளிவாக அறிவிக்கப்படாதது ஏன்?

இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் தனது அறிக்கையில் கேள்வி கணைகளை தொடுத்துள்ளார்.

English summary
Makkal Needhi Maiam party leader Kamal released a statement about Tuticorin fire. Kamal shoot outs many questions on the fire incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X