For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிருஷ்ணசாமியின் உடல் திருத்துறைப்பூண்டி வந்தடையும் வரை மக்கள் நீதி மய்யம் உதவும் : கமல்ஹாசன்

நீட் தேர்வு எழுதுவதற்காக மகனை கேரளா அழைத்துச்சென்று மாரடைப்பால் மரணமடைந்த கிருஷ்ணசாமியின் உடலை சொந்த ஊர் கொண்டு வருவதற்கு கமல் உதவி செய்கிறார்

By Rajendra Prasath
Google Oneindia Tamil News

Recommended Video

    நீட் தேர்வால் ஏற்பட்ட உடல்-மன உளைச்சலால் 3 பேர் பலி- வீடியோ

    சென்னை: நீட் தேர்வு எழுத தமது மகனை கேரளா அழைத்துச் சென்று மாரடைப்பால் மரணமடைந்த கிருஷ்ணசாமியின் உடலை அவரது சொந்த ஊரான திருத்துறைப்பூண்டிக்கு கொண்டுவருவதற்கான அனைத்து உதவிகளையும் மக்கள் நீதி மய்யம் செய்யும் என அதன் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

    தமிழகத்தைச் சேர்ந்த 5,000க்கும் அதிகமான மாணவர்கள் கேரளாவில் பல தேர்வு மையங்களில் எழுதினார்கள். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள தேர்வு மையத்திற்கு தமது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை அழைத்துக் கொண்டு, திருத்துறைபூண்டியில் இருந்து சென்றார் கிருஷ்ணசாமி.

     Kamal tweets on neet exam victim Krishnasamy

    இரவு முழுவதும் தூங்காமல் ரயிலில் நின்று கொண்டே சென்ற கிருஷ்ணசாமி, மகனை தேர்வு மையத்தில் விட்டுவிட்டு தங்கும் அறைக்குச் சென்றார். திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணசாமியின் மரணத்துக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹசான் இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், " ஒக்கி புயல் முதல் நீட் தேர்வு என்று தமிழர்கள் அல்லல் படும்பொழுதெல்லாம் உதவிக்கரம் நீட்டிய அண்டை மாநில முதல்வர் திரு.பிணராயி விஜயனிடம் பேசி தமிழர்களின் நன்றியைத் தெரிவித்தேன்.மாணவரின் தந்தை உடல் திருத்துறைப்பூண்டி வந்தடையும் வரை உதவிகள் செய்யும் மக்கள் நீதி மய்யம்.".
    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    English summary
    Makkal needhi maiyam president actor Kamalhassan has said that his party will help student Kasthuri Mahalingam to get his father's body to their own village.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X