For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சரித்திரம் காணாத புரட்சி தமிழகத்தில் வெடிக்கும்.. கமல் கடும் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: 3 மாவட்டங்களில் இன்டர்நெட் இணைப்பை மாநில அரசு துண்டித்துள்ளதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சரித்திரம் காணாத புரட்சி வெடிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தூத்துக்குடியில் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு அநியாயமாக 13 பேர் பலியாகியுள்ளனர். இந்த படுபாதக சம்பவத்தின் ஈரம் கூட காயாத நிலையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள இணைப்புகளை துண்டிக்க உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. இது தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kamal warns TN Govt for Internet cut in Tuticorin

கிட்டத்தட்ட உலகின் பிற பகுதிகளிலிருந்து இந்த 3 மாவட்டங்களும் துண்டிக்கப்பட்டது போன்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் போட்டுள்ள டிவீட்:

தூத்துக்குடியில் இணையம் துண்டிப்பா? அடுத்து என்ன தமிழர்களை சாதி விலக்கி வைப்பீர்களா? சரித்திரம் காணாத புரட்சி வெடிக்கும். மக்களின் வலிமையை எதிர் கொள்ளும் பலம் எந்த அரசுக்கும் இல்லை. அதுவும் இந்த அரசுக்கு இல்லவே இல்லை என்று காட்டம் காட்டியுள்ளார் கமல்.

English summary
Makkal Needhi Mayyam leader Kamal Haasan has warned the state govt for the Internet connection cut in Tuticorin (Thooththukkudi).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X