For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊடகங்கள், மக்களின் கேள்விக்கு ஏன் பதில் தர வேண்டும் என்கிற ஆணவத்தில் ஆட்சியாளர்கள்: கமல் தாக்கு

இன்னும் சில தினங்களில் மக்கள் நீதி மய்யத்தின், மய்யம் விசில் ஆப் வெளிவரும் என்று யூ டியூப் லைவில் கமல்ஹாசன் தெரிவித்து இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: ஊடகங்கள் மற்றும் மக்களின் கேள்விகளுக்கு ஏன் பதில் தர வேண்டும் என்கிற ஆணவத்தில் ஆட்சியாளர்கள் இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் சாடியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய கமல்ஹாசன் மிகவும் தீவிரமாக பணியாற்றிக்கொண்டு இருக்கிறார், அன்றாடம் நடக்கும் பிரச்சனைகளில் அவருடைய பார்வையை அவர் தெரிவித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று அவர் யூ டியூப் லைவில் பேசியதாவது:

Kamal Youtube Live: Maiam Whistle App will come to Android operating system soon

அதில் ''நீர்நிலைகளை தூய்மைப்படுத்துவது பெரும் கடமை. அதுதான் தற்போதைய தண்ணீர் பிரச்சனையை பெரிய அளவில் சரிசெய்யும். சரியாக நீர்நிலைகளை பராமரிப்பதன் மூலம், நாம் தண்ணீர் பிரச்சனையில் இருந்து எளிதாக வெளியே வரலாம்'' என்று குறிப்பிட்டார்.

மேலும் ''தமிழ்நாடு முழுக்க இன்னும் நிறைய பள்ளிக்கூடங்கள் திறக்க வேண்டும். பள்ளிக்கூடங்கள் திறந்த பின் தன்னார்வலர்கள் உதவ வேண்டும். தமிழகத்தின் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை. இந்த பிரச்னையை மக்கள் நீதிமய்யம் சரிசெய்யும். '' என்றார்.

மேலும் ''வெகுவிரைவில் மய்யம்விசில் ஆப் கிடைக்கும். இதில் மக்கள் தங்கள் குறைபாடுகளை தெரிவிக்கலாம். நாட்டில் என்ன பிரச்சனை, உங்கள் பகுதியில் என்ன பிரச்சனை என்று இதில் தகவல் தெரிவிக்கலாம். இந்த அப்ளிகேஷனை உருவாக்கும் வேலை தற்போது நடைபெற்று வருகிறது'' என்று குறிப்பிட்டுள்ள்ளார்.

ஆணவத்தில் ஆட்சியாளர்கள்

அத்துடன், ஊடகம் என்பது ஒரு ஆராய்ச்சி மணிதான். மக்கள், ஊடகங்களின் கேள்விக்கு ஏன் பதிலளிக்க வேண்டும் என்ற ஆணவம் ஆட்சியாளர்களுக்கு வந்து விட்டது. இதற்கு தீர்வு காணவே அரசியலுக்கு வந்திருக்கிறேன் என்றும் கமல்ஹாசன் கூறினார்.

English summary
Kamal Haasan in Youtube Live says Maiam Whistle App will come to the Android operating system soon for people usage. He says that people can complain their problems in this app.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X