For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தினகரனின் தம்பி பாஸ்(எ) பாஸ்கரனின் மன்றம் உடைந்தது.. கமலின் மக்கள் நீதி மய்யத்தில் ஐக்கியம்!

தினகரனின் தம்பி பாஸ் (எ) பாஸ்கரன் நடத்தி வந்த மன்றத்தின் நிர்வாகிகள் கமலின் மக்கள் நீதி மய்யத்தில் ஐக்கியமாகி உள்ளனர்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    தினகரனின் தம்பி பாஸ்(எ) பாஸ்கரனின் மன்றம் உடைந்தது..வீடியோ

    சென்னை : ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. தினகரனின் தம்பியான சின்ன எம்ஜிஆர் என அழைத்துக் கொள்ளும் பாஸ்(எ) பாஸ்கரன் நடத்தி வந்த மன்றத்தின் நிர்வாகிகள் அங்கிருந்து வெளியேறி கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளனர்.

    நடிகர் கமல்ஹாசன் புதிதாக துவக்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியில் இளைஞர்கள் பலர் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில் டிடிவி தினகரன் தம்பி பாஸ்கரன் நடத்தி வரும் மன்றத்தில் இருந்து அதன் மாநில இளைஞர் அணி செயலாளர் ஜெகதீஷ் குமார் தலைமையில் மன்ற நிர்வாகிகள் மற்றும் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியில் இருந்து விலகி இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் என திருவள்ளூர் மாவட்டத்தில் 500 க்கும் மேற்பட்டோர் கமல் கட்சியில் சேர்ந்துள்ளனர்.

    Kamalhaasan advises party cadres to serve honestly

    சென்னையில் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து அவரது முன்னிலையில் இளைஞர்கள் தங்களை மக்கள் நீதி மய்யத்துடன் இணைத்துக் கொண்டனர். அவர்களை வரவேற்ற கமல்ஹாசன் தொண்டர்கள் நேர்மையுடன் மக்களுக்கு செயலாற்ற வேண்டும் என்றும் தொண்டர்களின் அடையாளம் நேர்மையாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    English summary
    Youths from TTV. Dinakaran's brother Baskaran's Mandram joined in Kamalhaasan's Makkal Needi Maiam, Kamal advises them to serve people honestly.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X