For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

8 கிராமங்களை தத்தெடுத்த கமல்... கல்வி, சுகாதாரத்துக்கு முன்னுரிமை

8 கிராமங்களை கமல்ஹாசன் தத்தெடுத்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகத்தூர் கிராமமும் அதில் அடங்கும்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

திருவள்ளூர்: மொத்தம் உள்ள 12 ஆயிரம் கிராமங்களில் 8 கிராமங்களை தத்தெடுத்த கமல், அங்கு மேற்கொள்ளப்படும் நலத்திட்டங்கள் குறித்தும் பட்டியலிட்டார்.

மே தினத்தையொட்டி திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூரில் கிராம சபைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார்.

Kamalhassan adopted villages in Tiruvallur district

அவர் கூறுகையில் 12 ஆயிரம் கிராமங்களை தத்தெடுக்க இயலாது. அதனால் 8 கிராமங்களை தத்தெடுத்துள்ளோம். மக்களின் ஆதரவும் உதவியும் இருந்தால் 12 ஆயிரம் கிராமங்களை எங்களால் தத்தெடுக்க முடியும்.

வெற்றி பெற நினைக்கும் பாதையில் நாங்கள் நடக்கிறோம். எங்களுக்கு ஓட்டு போட வேண்டும் என்பதற்காக நாங்கள் கிராமங்களுக்கு உதவவில்லை.

தத்தெடுக்கப்பட்ட கிராமங்களில் அரசுப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும். கல்விக்கு நிகரானது ஆரோக்கியம். அதனால் 100 கழிப்பறைகள் கட்டித் தரப்படும். கிராமங்கள் இன்னும் பசுமையாக இருக்க மரங்களை நடவுள்ளோம்.

Kamalhassan adopted villages in Tiruvallur district

திறமைகளை வளர்த்து கொள்வதற்காக கிராம மக்களுக்கு பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படும். நீர் சேகரிக்க வசதியாக குளம், குட்டைகள் சீரமைக்கப்படும், புனரமைக்கப்படும்.

செய்ய முடியும் விஷயங்களை செய்வோம். செய்ய முடியாததை எங்களால் முடியவில்லை, எப்படி செய்ய வேண்டும் என உங்களுடன் கலந்தாலோசித்து செய்வோம் என்றார் அவர்.

English summary
Kamal Hassan adopts villages in Tiruvallur District and also list out the things which are going to be done.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X