For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காரைக்குடி பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா

Google Oneindia Tamil News

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இன்று 15.07.2016 கல்வி வளர்ச்சி நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அழகப்பா பல்கலைகழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் டாக்டர். குரு மலேஷ் பிரபு அவர்கள் தலைமை ஏற்றார். தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜா அவர்கள் அனைவரையும் வரவேற்றார். இவ்விழாவில் அழகப்பா பல்கலைக் கழக துணைத் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அருண் அவர்கள், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் அழகு சுந்தரி, கிராமக் கல்விக் குழுத்தலைவர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

Kamarajar birth day celebrated in Karaikudi school

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் பேசும்போது மாணவர்களிடம் படிப்பு, அறிவு, திறமை இந்த மூன்றும் இருந்தாலே வாழ்கையில் முன்னேற்றம் காண இயலும் என்று கூறினார். அவர் மேலும் தனியார் பள்ளிக்கு மேலாக அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி அதற்கு உதாரணமாக செயல்படுகிறது என்றார்.

Kamarajar birth day celebrated in Karaikudi school

இப்பள்ளியின் வளர்ச்சி, கட்டிட அமைப்பு, பள்ளிக்கென்று இணையதளம் ஆகியவை பிரமிக்கத்தக்கவகையில் இருப்பதாகவும் கூறினார். அரசு பள்ளி மாணவர்கள் மிக உயர்ந்த பதிவிகளை வகிக்க முடியும். உயர் பதவியில் உள்ளவர்கள் பெரும்பாலும் அரசு பள்ளியில் படைத்தவர்கள் தான் என்றார்.

Kamarajar birth day celebrated in Karaikudi school

மாணவர்களுக்கு இந்நிகழ்ச்சியை முன்னிட்டு பேச்சு போட்டி, கவிதை போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர் பிரசாந்த் காமராஜர் வேடமிட்டு கவிதை படித்தார். மாணவி பிருந்தா காமராஜரை பற்றி தமிழிலும், மாணவி ஜீவிதா ஆங்கிலத்திலும் பேசினார்கள். மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

Kamarajar birth day celebrated in Karaikudi school

பட்டதாரி ஆசிரியர் சித்ரா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் விஜயலெட்சுமி செய்திருந்தார்.

English summary
Late chief minister Kamarajar's birth day was celebrated in Karaikudi Ramanathan municipal high school today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X