For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காமாட்சி அம்மன் கோவில் நடை திறப்பு.. பூஜைகள் மட்டும் நடைபெறவில்லை

காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    காமாட்சி அம்மன் கோவில் நடை மூடல்!-வீடியோ

    காஞ்சிபுரம்: சங்கர மடத்தின் மூத்த மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி உயிரிழந்ததை தொடர்ந்து மூடப்பட்ட காமாட்சியம்மன் கோவில் நடை திறக்கப்பபட்டது.

    காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மூத்த மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி உயிரிழந்ததை தொடர்ந்து காமாட்சியம்மன் கோவில் நடை அவசரஅவசரமாக சாத்தப்பட்டது.

     Kanchi Kamatchiyamman temple will be closed

    காஞ்சிபுரம் சங்கரமடத்தின் மூத்த மடாதிபதியான ஜெயேந்திரருக்கு இன்று காலை திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.

    இதையடுத்து தனியார் மருத்துவமனையில் இருந்து ஜெயேந்திரரின் உடல் சங்கர மடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. ஜெயேந்திரரின் மறைவை அடுத்த சங்கரமடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காஞ்சி காமாட்சியம்மன் கோவில் நடை சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து காலையில் வீதி உலா சென்றிருந்த காமாட்சியம்மன் சிலை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு கோவிலுக்குள் இருந்த பக்தர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு கோவில் நடைசாத்தப்பட்டது.

    வழக்கமாக 12 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். இன்று ஜெயேந்திரர் மரணத்தை முன்னிட்டு கோவில் நடை காலையிலேயே சாத்தப்பட்டது.

    பின்னர் மாலை 5 மணிக்கு காமாட்சியம்மன் கோவில் நடை திறக்கப்பட்டது. ஆனால் பூஜைகள் மட்டும் நடைபெறவில்லை.

    English summary
    Kanchi Kamatchiyamman temple closed due to Jayenthirar death. Kanci Sankara math Jayenthirar dead due to heart attack. In the evening temple opened but no Poojas were there in the temple.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X