For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனியர்களும், ஜூனியர்களும்.... காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் பயோடேட்டா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தேமுதிகவிலிருந்து அதிமுகவில் இணைந்து தற்போது மீண்டும் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார் பண்ருட்டி ராமச்சந்திரன்.

மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் ஆரம்பத்தில் திமுக, பின்னர் அதிமுக, அதன் பிறகு பாமக, இடையில் தேமுதிக என பல கட்சிகள் மாறி தற்போது அதிமுகவில் அடைக்கலமாகியுள்ளார்.

தேமுதிகவிலிருந்து வந்தவர்களில் 2 பேருக்கு மட்டுமே ஜெயலலிதா சீட் கொடுத்துள்ளார். அவர்களில் ஒருவர்தான் பண்ருட்டியார். காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் விவரம்:

லியோ.என்.சுந்தரம் (சோழிங்கநல்லூர்)

படிப்பு 9-ம் வகுப்பு. சென்னை மாநகராட்சியின் 197-வது வார்டு கவுன்சிலர். சோழிங்கநல்லூர் தொகுதி அதிமுக கழக செயலாளர் மற்றும் மாநகராட்சி 15-வது மண்டல குழுத் தலைவர். 2001-2011ல் காரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர். வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். தந்தை நாராயணசாமி, தாயார் கன்னியம்மாள், மனைவி லலிதா மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர்.

பண்ருட்டி ச.ராமச்சந்திரன் (ஆலந்தூர்)

கடலூர் மாவட்டம் புலியூ ரைச் சேர்ந்தவர். அண்ணா மலை பல்கலையில் இளநிலை பொறியியல் பட்டம். மின்வா ரியத்தில் இளநிலை பொறியா ளராக பணியாற்றினார். 5 முறை எம்.எல்.ஏ. ஆரம்பத்தில் திமுக மற்றும் அதிமுக பணியாற்றியவர். பின்னர், மக்கள் நல உரிமை கழகம் என்ற அமைப்பை நடத்தினார்.

கருணாநிதி, எம்.ஜி.ஆர் அமைச்சரவைகளில் அமைச்சர். தேமுதிகவில் அவைத்தலைவராக இருந்து ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி. 2014-ல் தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். தற்போது அதிமுகவின் அமைப்பு செயலாளர்.

கே.பழனி (ஸ்ரீபெரும்புதூர்)

அதிமுக குன்றத்தூர் ஒன்றிய செயலாளர். ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர். ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். தந்தை குமாரசாமி, தாயார் தனம்மாள். ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர். மனைவி விஜயா, மகன் லோகநாதன், மகள் திவ்யா.

சிட்லபாக்கம் ராஜேந்திரன் (தாம்பரம்)

சிட்லபாக்கத்தைச் சேர்ந் தவர். பிஏ., பிஎல். பட்டதாரி. முன்னாள் எம்.பி. தற்போது அதிமுக காஞ்சி கிழக்கு மாவட்டச் செயலாளர். காஞ்சி மத்திய மாவட்டச் செயலாளர் பொறுப்பையும் கவனிக்கிறார். சிட்லபாக்கம் பேரூராட்சி துணைத் தலைவர், கவுன்சிலர், பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத் தலைவர் பொறுப்புகளை வகித்துள்ளார். கிரிக்கெட், பேட்மின்டன் விளையாட்டில் ஆர்வமிக்கவர். புத்தக ஆர்வலர், கவிஞரும்கூட. மனைவி ருக்மணி. மகன்கள் அஸ்வின், பிரவீன்.

ஆர்.கமலகண்ணன் (செங்கல்பட்டு)

படிப்பு 10-ம் வகுப்பு. 2008-ம் ஆண்டு முதல் அதிமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணிச் செயலாளர். 2011-ல் விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டாலும், அத்தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டதால் தேர்தலில் போட்டியிடவில்லை. தந்தை ராஜரத்தினம். தாயார் சிவகாமி. மனைவி மல்லிகேஸ்வரி. ஒரு மகன், 2 மகள்கள். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்.

எம்.கோதண்டபாணி (திருப்போரூர்)

எம்.ஏ. பட்டதாரி. அதிமுக காஞ்சி மத்திய மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர். மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர். 2005 முதல் கட்சியின் பேரூராட்சி செயலாளர். அதிமுக பொதுக்குழு உறுப்பினர் பதவி வகித்தவர். தந்தை பெயர் எம்.கே.முனுசாமி. தாயார் செல்லம்மாள், மனைவி சுகந்த குந்தலாம்பிகை. பிள்ளைகள் இல்லை. வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்.

ஏ.முனுசாமி (செய்யூர் (தனி))

எம்.ஏ. பட்டதாரி. திருப்போரூர் ஒன்றிய அதிமுக கிளை கழக செயலாளர். முட்டுக்காடு ஊராட்சி கழக செயலாளர். முட்டுக்காடு ஊராட்சி தலைவராக இருந்துள்ளார். அதிமுக காஞ்சி மத்திய மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர். ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர். தந்தை ஆறுமுகம், தாயார் முனியம்மாள், மனைவி ரேணுகா மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

செ.கு.தமிழரசன் (மதுராந்தகம் (தனி))

அதிமுகவின் தோழமைக் கட்சியான இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர். எம்.ஏ. பட்டதாரி. பேரவைத் தேர்தலில் 7 முறை போட்டியிட்டு, 1984-ல் பேரணாம்பட்டு, 1991-ல் வந்தவாசி, 2001-ல் நன்னிலம், 2011-ல் கே.வி.குப்பம் தொகுதிகளில் வெற்றி. 2011-ல் சட்டமன்ற தற்காலிக சபாநாயகர். ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர். தந்தை குப்புசாமி, தாயார் தவமணி, மனைவி பூரணியம்மாள். 2 மகள்களில் ஒருவர் மருத்துவர், மற்றொருவர் பொறியியல் பட்டதாரி.

பா.கணேசன் (உத்திரமேரூர்)

படிப்பு 5-ம் வகுப்பு. காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளர். வாலாஜாபாத் ஒன்றிய செயலாளர் மற்றும் மாவட்ட அவைத் தலைவராக இருந்துள்ளார். 2011-ல் உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. யாதவர் சமூகத்தைச் சேர்ந்தவர். தந்தை பார்த்தசாரதி, தாயார் கிருஷ்ண வேணியம்மாள். மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர்.

மைதிலி (காஞ்சிபுரம்)

கணவர் திருநாவுக்கரசு. காஞ்சி அதிமுக மாவட்ட கழக இணைச் செயலாளர். காஞ்சி நகரமன்ற தலைவர். 2005-ல் காஞ்சி எம்.எல்.ஏ. திருநாவுக்கரசு மரணம் அடைந்ததால், அவரது மனைவியான மைதிலி, இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி. 2006-ல் காஞ்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி.

சி.ஆர். சரஸ்வதி

பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளராக நடிகை சி.ஆர். சரஸ்வதி சி.ஆர். சரஸ்வதி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அதிமுக செய்தி தொடர்பாளர். மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர். அதிமுகவின் பிரதிநிதியாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவர்.

English summary
ADMK candidates bio data for Kanchipuram district
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X