For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறுவனை துப்பாக்கியால் சுட்ட இன்ஸ்பெக்டருக்கு குழந்தைகள் நலக் குழு சம்மன்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுவனை துப்பாக்கியால் சுட்ட விவகாரத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க இன்ஸ்பெக்டருக்கு, காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நலக் குழு சம்மன் அனுப்பியுள்ளது.

சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள வெட்டுவாங்கேணி மகாத்மாகாந்தி நகரில், கோயில் உண்டியல் உடைக்கப்பட்டது தொடர்பாக நீலாங்கரை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில், கடந்த டிசம்பர் மாதம் 7ஆம் தேதி அதே பகுதியை சேர்ந்த சிறுவன் அன்சாரியை சந்தேகத்தின் பேரில் அழைத்து வந்து, இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் விசாரணை நடத்தியுள்ளார்.

அப்போது, துப்பாக்கியை சிறுவனின் வாயில் வைத்து மிரட்டியபோது சிறுவனின் தொண்டையில் குண்டு பாய்ந்துள்ளது. உடனடியாக சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தற்போது வீடு திரும்பியுள்ள சிறுவன் பேச முடியாத நிலையில் இருக்கிறான்.

இந்நிலையில், இன்ஸ்பெக்டர் புஷ்பராஜூக்கு, காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நலக் குழு சம்மன் அனுப்பியுள்ளது. அதில், வரும் 14ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
Kanchipuram District Children welfare association has issued summons to Inspector who threatened a boy during a probe
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X