For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹெல்மெட் போடாவிட்டால் அடிப்பதா?: அதிகாரம் கொடுத்தது யார்?: போலீஸுக்கு கனிமொழி கேள்வி

ஹெல்மெட் போடாவிட்டால் பொதுமக்களை அடிப்பதற்கு போலீஸுக்கு அதிகாரம் கொடுத்தது யார் என்று கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ஹெல்மெட் போடாவிட்டால் அடிப்பதற்கு போலீஸுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?- கனிமொழி

    சென்னை: ஹெல்மெட் போடாவிட்டால் வழக்கு போடுவதை விடுத்து பொதுமக்களை அடிப்பதற்கு அதிகாரம் கொடுத்தது யார் என்று திமுக மாநிலங்களவை எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

    சென்னையை சேர்ந்தவர் பிரகாஷ் (21). இவர் தனது தாய் மற்றும் தங்கையுடன் பைக்கில், திநகரில் உள்ள பிரபல ஜவுளிக் கடையொன்றில் துணி வாங்கிவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, ஹெல்மெட் அணியவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து, அவரை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் சில போலீஸார் வழிமறித்து நிறுத்தியுள்ளனர். டூ வீலரில் மூவர் பயணித்தது மற்றும் ஹெல்மெட் அணியாதது ஆகியவற்றுக்காக பிரகாஷை போலீஸார் திட்டியதாக கூறப்படுகிறது.

    சட்டையை பிடித்த பிரகாஷ்

    சட்டையை பிடித்த பிரகாஷ்

    அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, பிரகாஷின் தாயை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அடித்ததாகவும், இதை பார்த்து பிரகாஷ் கோபத்தில், சப்-இன்ஸ்பெக்டர் சட்டை காலரை பிடித்ததாகவும் தெரிகிறது.

    கையை முறித்தனர்

    கையை முறித்தனர்

    இதனால் கோபமடைந்த போலீஸார், பிரகாஷை கம்பத்தில் நிற்கவைத்து அவர் கைகளை ஒரு போலீஸ்காரர் பிடித்து கொள்ள மற்றவர்கள் அவரது கையை முறிப்பதும், விரல்களை முறிப்பதுமாக இருந்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. போலீஸாரின் இந்த செயலுக்கு கனிமொழி எம்பி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    டுவிட்டரில் கனிமொழி

    இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறுகையில், சென்னை தி.நகரில் பிரகாஷ் என்ற வாலிபரை டிராபிக் போலீசார் கம்பத்தில் கட்டி வைத்து, கையை முறிக்க முயலும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

    இளைஞர் தீக்குளிப்பு

    இளைஞர் தீக்குளிப்பு

    போலீசாரின் இது போன்ற அராஜக செயல்கள் கண்டிக்கத்தக்கது. சென்னை ஓ.எம்.ஆரில் டிரைவரை போலீஸார் பொதுவெளியில் அடித்ததால் அவர் தீக்குளித்தார்.

    வழக்கு போட வேண்டியதுதானே

    வழக்கு போட வேண்டியதுதானே

    திருச்சியில் பெண் என்றும் பாராமல் எட்டி உதைத்துக் கொன்றனர், டிராபிக் போலீஸ். இப்போது, தாய் கண் முன் மகனை கட்டி வைத்து அடித்துள்ளனர். ஹெல்மெட் போடவில்லை என்றால் வழக்கு போடுவதை விட்டுவிட்டு, அடித்து உதைக்க போலீசாருக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    English summary
    Kanimozhi condemns Police for attacking youth who has not wore helmet in Chennai T Nagar. She also recalls the youth setsa ablaze himself in Chennai OMR, Trichy Usha etc.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X