For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் கனிமொழி காட்டும் 'அக்கறை'- ஆடிப்போயுள்ள ஆளும் கட்சி

சென்னை: திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில், முன்னணி ஜாதி வாக்குகளை திமுக பக்கம் ஈர்க்க கனிமொழி முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

By Raj
Google Oneindia Tamil News

மதுரை: மூன்று இடைத்தேர்தல்களில் சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார் மு.க.ஸ்டாலின். இதனிடையே, இடைத்தேர்தல் களத்தில் தனது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக கனிமொழியும் தனது பங்கிற்கு பணியாற்றி வருகிறார்.

கனிமொழி தரப்பில், நாம் பேசியபோது, திருப்பரங்குன்றத்தில் திமுகவை வெற்றிபெற வைக்க, ஜாதி ரீதியிலான ரகசிய காய்களை நகர்த்தியுள்ளார் அவர். அத்தொகுதியில், முக்குலத்தோர் 25 சதவீதம், முத்தரையர்கள் 16 சதவீதம், நாடார்கள் மற்றும் நாயுடுகள் தலா 12 சதவீதம், பிற சாதியினர் 35 சதவீதம் இருக்கின்றனர்.

இவர்களில் முத்தரையர்கள், நாடார்கள், நாயுடுகளின் சமூக வாக்குகளை வளைக்கும் திட்டத்தைப்போட்டு சம்மந்தப்பட்ட சமூகத்தின் முக்கிய புள்ளிகளிடம் கனிமொழி ஒரு சுற்று பேச்சு வார்த்தையை நடத்தியுள்ளார் கனிமொழி.

இதில், முத்தரையர்களும், நாடார்களும் கனிமொழிக்கு பாசிட்டிவ்வான பதிலையும், நாயுடுகள் ஆலோசித்து சொல்வதாகவும் சொல்லியுள்ளனர். அதனால் திருப்பரங்குன்றத்தில் கனிமொழியின் அரசியலால் கடும் நெருக்கடியை ஆளும் கட்சி எதிர்கொண்டு வருகிறது. இவ்வாறு விவரிக்கிறார்கள் கனிமொழி தரப்பினர்.

இதற்கிடையே, நாயுடுகளின் வாக்குகளை திமுகவும் தேமுதிகவும் அறுவடை செய்ய பகீரத முயற்சியை எடுத்துள்ளதால் அச்சமூகத்தின் வாக்குகளை அதிமுக பக்கம் திருப்ப, வைகோவிற்கு அசைண்மெண்ட் கொடுத்துள்ளாராம் சசிகலா.

இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் தமிழகத்தின் தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல்களை போலவே வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Kanimozhi is trying to vow caste majority votes to DMK in Tirupparanguntam by election, says sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X