For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கமலை தொடர்ந்து எண்ணூர் கழிமுகத்தில் கனிமொழி ஆய்வு.. மீனவர்களுக்கு அபாயம் என எச்சரிக்கை

எண்ணூர் கழிமுக பகுதியில் சாம்பல் கழிவுகளால் மீனவ மக்களுக்கு ஆபத்து என்று மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    கமலை தொடர்ந்து எண்ணூர் கழிமுகத்தில் கனிமொழி ஆய்வு...வீடியோ

    திருவள்ளூர்: எண்ணூர் கழிமுக பகுதியில் சாம்பல் கழிவுகளால் மீனவ மக்களுக்கும் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து என்று திமுக எம்.பி. கனிமொழி எச்சரிக்கை விடுத்தார்.

    கொசஸ்தலை ஆற்றில் சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதால் தண்ணீர் போக வழியில்லை என்பதால் வடசென்னைக்கு ஆபத்து என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியிருந்தனர்.

    இதையடுத்து கமல்ஹாசனும் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த கருத்தை பதிவு செய்திருந்தார். மேலும் வல்லூர் அனல்மின் நிலையத்தினர் எண்ணூர் கழிமுக பகுதியை ஆக்கிரமித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். அடுத்த நாளே கமல்ஹாசன் நேரில் சென்று எண்ணூர் கழிமுக பகுதியை ஆய்வு செய்தார்.

     ஆட்சியர் உத்தரவு

    ஆட்சியர் உத்தரவு

    பின்னர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதையடுத்து கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அனல் மின் நிலையத்தால் போடப்பட்ட சாலையை அகற்ற கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆட்சியர் உத்தரவிட்டார்.

    சாம்பல் கழிவால் ஆபத்து

    இந்நிலையில் எண்ணூர் கழிமுக பகுதியை திமுக எம்.பி. கனிமொழி நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது புழுதிவாக்கம், அத்திப்பட்டு உள்ளிட்ட பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதுகுறித்து கனிமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில், எண்ணூர் கழிமுகப் பகுதியில் நிலக்கரி சாம்பல் கழிவால் மீனவ மக்களுக்கு ஆபத்து உள்ளது.

     1000 ஏக்கர் ஆக்கிரமிப்பு

    1000 ஏக்கர் ஆக்கிரமிப்பு

    சாம்பல் கழிவுகளால் இறால் மீன்களும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 8 ஆயிரம் ஏக்கர் கழிமுகப் பகுதியில் 1000 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்பை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் கனிமொழி.

     தமிழகத்தில் நேரமில்லை

    தமிழகத்தில் நேரமில்லை

    இந்து மதத்தை அழிக்க வந்ததுதான் திராவிடர் கழகம் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருந்தது குறித்து கனிமொழியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு கனிமொழி கூறுகையில், எச்.ராஜா கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல தமிழகத்தில் யாருக்கும் நேரமில்லை என்றார் கனிமொழி.

    English summary
    Rajyasabha MP Kanimozhi today visited Ennore creek and says that ash wastages are harmful for fisheries.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X