For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"காவிரியை வச்சுக்கோ.. "அம்மா"வைக் கொடுன்னு சொல்லிட்டு திருப்பிக் கேட்டா எப்படி?"

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவினர் ஜெயலலிதா சிறையில் இருந்தபோது "காவிரியை வச்சுக்கோ, அம்மாவைத் திருப்பிக் கொடு" என்று முட்டாள்தனமாக நடந்து கொண்ட கோமாளித்தனத்தை வைத்து தற்போது தமிழக மக்களை கிண்டலடித்து வருகின்றனர் கன்னட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக சமூக வலைதளங்களில் இதுதொடர்பாக கன்னட அமைப்பினர் வாசகங்களைப் போட்டு வருகின்றனராம்.

அது மட்டுமல்லாமல் கர்நாடகத்தில் பல்வேறு அமைப்பினர் நடத்தி வரும் போராட்டத்திலும் இதைத்தான் ஹைலைட்டாக சொல்லி தமிழகத்தை கிண்டலடிக்கின்றனராம்.

Kannada movements tease ADMK cadres during their protest in Cauvery issue

கடந்த ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குப் போனார் ஜெயலலிதா. பெங்களூர் அருகே பரப்பன அக்ரஹாரா சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இதையடுத்து தமிழகத்தில் அதிமுகவினர் தாறுமாறான போராட்டங்களில் ஈடுபட்டனர். தரையில் படுத்து உருண்டனர், மார்பில் அடித்துக் கொண்டு அலறினர், கொடும்பாவிகளை கொளுத்தினர், தொடர் மறியல், உண்ணாவிரதம் என அதகளப்படுத்தினர்.

அதிலும் சிலர் ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்க்கிறோம் என்ற போர்வயைில் லூசுத்தனமான செயல்களிலும் ஈடுபடத் தவறவில்லை. அதில் ஒன்றுதான் காவிரியை வச்சுக்கோ, எங்க அம்மாவைத் திருப்பிக் கொடு என்று எழுதப்பட்ட வாசகங்களுடன் கூடிய போஸ்டர்கள். இதை அப்படியே நமக்கு எதிராக கிண்டலடிக்கும் ஆயுதமாக கன்னட அமைப்புகள் பயன்படுத்தி தமிழகத்தைக் கிண்டிலடிக்கிறார்களாம்.

Kannada movements tease ADMK cadres during their protest in Cauvery issue

அதான் காவிரியை வச்சுக்கோன்னு சொல்லிட்டீங்களே, பிறகு எதற்கு திரும்பக் கேட்கிறீர்கள் என்று கிண்டலாக கூறுகிறார்களாம்.

அதிமுகவினர்தான் இதற்குப் பதிலளிக்க வேண்டும்!

English summary
Cadres of various Kannada movements are teasing the ADMK for their slogan "Take Cauvery, give our Amma" during their protest when Jayalalitha was jailed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X