For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீன் குழம்பும், தேங்காய் சட்னியும், மீண்டு வந்த கரண்ட்டும்.. குமரியிலிருந்து ஒரு உணர்வு கட்டுரை!

Google Oneindia Tamil News

Recommended Video

    கேரளாவுடன் இணைவோம்.. குமரி மக்களின் முழக்கம்.. அதிர்ச்சியில் தமிழக அரசு!- வீடியோ

    நாகர்கோவில்: கன்னியாகுமரியில் நிலவரம் எப்படி உள்ளது. மக்களின் நிலை எப்படி உள்ளது. கன்னியாகுமரியிலிருந்து நமது வாசகர் சஹாயதேவி எழுதியுள்ள ஒரு உணர்வுக் கட்டுரை:

    நேற்று இரவு குமரியின் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் வந்தது. புயல் வந்து எட்டு நாட்கள் ஆகியும் இருளோடு போராடியே சோர்ந்து போன குமரி மாவட்ட மக்கள் நேற்று பெருமூச்சு விட்டனர். எட்டு நாட்கள் தவித்து பின் மின்சாரத்தை கண்டா மக்களின் மனநிலை எப்படி இருக்கும் இப்படி தான்.

    கரண்ட் வந்துடுச்சு என்று தொலைவில் இருக்கும் உறவினர்களுக்கு மெசேஜ் அனுப்பும் அளவுக்கு மக்கள் சந்தோஷத்தில் துள்ளி விட்டார்கள். குறுந்தகவல் மூலம் தகவல் பரிமாற்றங்கள் நாடு கடந்தும் தகவலை சுமந்து செல்கின்ற்ன.

    வெக்கையில் புழங்கிய மக்கள்

    வெக்கையில் புழங்கிய மக்கள்

    கடந்த ஒரு வாரமாக மின்சாரம் இல்லாத இருட்டோடும் கொசுவோடும் வெக்கையோடும் புழுங்கிய மக்கள் ஒருவாறு நிம்மதி அடைந்தனர். அப்பாடா என்ற பெருமூச்சுடன் அந்த மக்கள் வெகு நாளைக்கு பிறகு நல்ல தூக்கம் தூங்கியதாக சொன்னார்கள். தினம் மீன் குழம்பும் சோறும் சாப்பிடும் குமரி மாவட்ட மக்களிடம் சாப்பாடு எப்படி சமாளித்தீர்களோ என்று கேட்டபோது தினம் புளிச்சோறு கிண்டி வைத்து இரு நேரம் உண்டு பின்பு அது போரடித்துரசம் ,சாம்பார் சோறு கொஞ்சம் மிச்சர் சீவல் இப்படி தான் ஒரு வாரம் போச்சு என்றனர்.

    அக்கா கொஞ்சம் அம்மி கொடேன்

    அக்கா கொஞ்சம் அம்மி கொடேன்

    குமரியில் தென்னை மரங்கள் அதிகமாக இருப்பதால் காலம் காலமாக எல்லா குழம்புகளிலும் பெரும்பாலும் தேங்காவை தாராளமாக அரைத்து ஊற்றுவது தான் இந்த மாவட்ட மக்களின் வழக்கம். அனால் இப்போது மின்சாரம் இல்லை மிக்ஸி இல்லை என்றதும் மிகவும் தவித்து விட்டனர். சிலர் வீட்டில் மூலையில் கிடந்த அம்மியை தேடி எடுத்து விட்டனர். சிலர் வீட்டில் அம்மியே இப்போது இல்லை என்று ஆன பின் கூட தேங்காய் அரைக்க அடுத்த வீட்டுக்கு அம்மி தேடி போய் சமாளித்துள்ளனர்.

    மாவு இல்லை மக்களே

    மாவு இல்லை மக்களே

    பிரிட்ஜில் இருந்த மாவு இரண்டு நாளில் காலி ஆகி உப்புமா, சேமியா, புட்டு என்றே காலை உணவை ஒட்டிய தாய்மார்கள் கரண்ட் வந்த கையோடு அப்பாடா நாளையாவது பிள்ளைக்கு இட்லி குடுக்கலாம் என்று மாவாட்ட வேண்டும், உளுந்து ஊற போடணும் என்று விறுவிறுவென எழுந்து போனதாக சொல்லி இருக்கிறார்கள் .

    நல்லா குளிக்கலாம்

    நல்லா குளிக்கலாம்

    அடுத்து மோட்டார் சுவிட்ச் ஆன் பண்ணி டேங்க் நிறைக்க ஓடி இருக்கிறார்கள். இனி நாளையாவது நல்லா குளிக்கலாம் என்று குடிநீருக்கே கேன் வாட்டர் வாங்கி ஏங்கிய மக்கள் பெருமூச்சு விட்டிருக்கிறார்கள். சில ஊர்களில் தினந்தோறும் குறிப்பிட்ட நேரங்களில் ஆலயங்களில் ஜெனெரேட்டர் போட்டு மக்களுக்கு மொபைல் சார்ஜ் ஏற்ற உதவி செய்திருக்கிறார்கள். வரிசையில் நிற்காத குறையாய் நின்று சார்ஜ் போட்டு மொபைல் ஐ பாதுகாக்க பக்கத்தில் நின்று காவல் கிடந்து சார்ஜ் ஏற்றிய மக்கள் இனி மொபைல் சார்ஜ் பண்ண கோவில் போக வேண்டாம் என்று நிம்மதியாக மொபைல் முழுமையாக சார்ஜ் ஏற்ற பிளக் இல் சொருவி இருக்கிறார்கள்.

    குமரியின் இருள் மறைகிறது

    குமரியின் இருள் மறைகிறது

    அப்பாடா இனி டிவி பாக்கலாம் என்று குட்டீஸ்க்கு மகிழ்ச்சி. நியூஸ்ஐ போடு என்று பெரியவர்களும் ஒரு பாட்டை போடு என்று இளசுகளும் ம்ஹூம் சுட்டி டீவியை போடு என்று குட்டீஸ்களும் என்று கை மாறி கொண்டிருக்கிறது ரிமோட் கண்ட்ரோல். இப்படியாக குமரியின் இருள் மறைய தொடங்கி இருக்கிறது.

    English summary
    Cyclone hit Kanyakumari district s limping back to normalcy after a week and people are still longing for the full recovery and recovering slowly.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X