For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கன்னியாகுமரி பெண்கள்தான் அதிகம் படித்தவர்கள்… நாங்க சொல்லலைங்க.. புள்ளிவிவரம் சொல்லுதுங்க

கன்னியாகுமரி மாவட்டப் பெண்களே அதிகம் படித்தவர்கள் என்று 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை விட அதிக அளவில் கல்வியறிவு வளர்ச்சி அடைந்துள்ளது.

2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற பெண்களின் படிப்பறிவு விகிதம் கண்டறியப்பட்டது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் கல்வியறிவில் முதல் இடத்தை பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் ஒட்டு மொத்தமாக பார்த்தால் பெண்களின் கல்வியறிவு 73. 86 சதவீதமாக உள்ளது. இதில் கிராமப்புறத்தைச் சேர்ந்த பெண்களின் கல்வியறிவு 65.52 சதவீதமாகவும், நகர்ப்புறத்தைச் சேர்ந்த பெண்களின் கல்வியறிவு 82. 67 சதவீதமாகவும் உள்ளது.

முதலிடம்

முதலிடம்

இதில் நகர்ப்புறம் என்று எடுத்துக் கொண்டால், கன்னியாகுமரி மாவட்டமே 90. 45 சதவீதம் பெற்று முதல் இடத்தில் உள்ளது. 87.16 சதவீதம் பெற்று சென்னை 2வது இடத்திலும், 81. 77 சதவீதம் பெற்று தூத்துக்குடி மாவட்டம் 3வது இடத்திலும் உள்ளது. 80.17 சதவீதம் பெற்று காஞ்சிபுரம் மாவட்டம் 4வது இடத்தில் உள்ளது.

கடைசி இடம்

கடைசி இடம்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நகர்ப்புறப் பெண்கள் 60.03 சதவீதம் கல்வியறிவு பெற்றுள்ளனர். இதுதான் இந்த வரிசையில் கடைசி இடத்தைப் பிடித்துள்ள மாவட்டமாகும். அரியலூர் மாவட்டம் 62.22 சதவீதம் பெற்று தர்மபுரி மாவட்டத்திற்கு சற்று முன்பாக உள்ளது.

நகர்ப்புறம்

நகர்ப்புறம்

இதே போன்று, நகர்ப்புற பெண்கள் பெற்ற கல்வியறிவு விகிதத்திலும் கன்னியாகுமரி மாவட்டமே 90.67 சதவீதம் எடுத்து முதல் இடத்தில் உள்ளது. 87.16 சதவீதம் எடுத்து சென்னை 2வது இடத்திலும், 87.04 சதவீதம் பெற்று தூத்துக்குடி 3வது இடத்தை பிடித்துள்ளது. இதிலும் தர்மபுரி மாவட்டம் 70.25 சதவீதம் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

கிராமப்புறம்

கிராமப்புறம்

நகர்ப்புற பெண்களின் கல்வியறிவு விகிதத்தைப் போன்றே கிராமப்புற பெண்கள் படிப்பறிவும் தனியாக பட்டியலிடப்பட்டுள்ளது. அதன்படி, 89.42 சதவீதம் பெண்கள் கல்வியறிவு பெற்று கன்னியாகுமரி மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி மாவட்டம் 76.51 சதவீதம் எடுத்து இரண்டாவது இடத்திலும், 75.96 சதவீதம் எடுத்து நாகப்பட்டினம் 3வது இடத்திலும் உள்ளது. இதிலும் 57.8 சதவீதம் பெற்று தர்மபுரி மாவட்டமே கடைசி இடத்தில் உள்ளது.

English summary
2011 census has revealed that Kanyakumari district women are top in education. The last place is Dharmapuri District.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X